பங்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய இந்திய நாட்டுப் பாடல் ‘வந்தே மாதரம்’ எழுதப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. அக்ஷய நவமி தினத்தில் எழுதப்பட்ட இந்த பாடல் 1875 நவம்பர் 7ம் தேதி அன்று வந்த நவமியன்று எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாடல் எழுதப்பட்ட 150 ஆண்டைக் குறிக்கும் வகையில் கர்நாடகா மாநிலம் ஹொன்னாவரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக எம்.பி. விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, நமது நாட்டு தேசிய கீதம் பிரிட்டிஷாரை வரவேற்க பாடப்பட்டது” என்று கூறினார். […]