ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு

புதுடெல்லி: ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வார் மாவட்​டம் லக்​ஷ்மன்​கர்​கில் உள்ள கபன்​வாடா கிராமத்​தைச் சேர்ந்​தவர் அஜித் சிங் சவுத்​ரி. 22 வயதான இவர் ரஷ்​யா​வின் உபா நகரத்​தில் உள்ள பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்​கல் யுனிவர்​சிட்​டி​யில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார்.

பல்​கலைக்​கழக விடு​தி​யில் தங்​கி​யிருந்த இவர் கடந்த அக்​டோபர் 19-ம் தேதி காலை 11 மணி அளவில் பால் வாங்​கு​வதற்​காக வெளி​யில் சென்​றார். அதன் பின் விடு​திக்கு திரும்​ப​வில்லை என்று கூறப்​படு​கிறது.

இந்த நிலை​யில், கடந்த 19 நாட்​களாக தீவிர​மாக தேடப்​பட்டு வந்த அஜித் சிங் வெள்ளை நதிக்கு அரு​கே​யுள்ள அணையி​லிருந்து சடல​மாக கண்​டெடுக்​கப்​பட்​டார். இதனை அவரது நண்​பர்​கள் உறுதி செய்​துள்​ளனர். அஜித் உயி​ரிழந்​தது குறித்து அவரது குடும்​பத்​தா​ருக்கு ரஷ்​யா​வில் உள்ள இந்​திய தூதரகம் மூலம் முறைப்​படி தெரியப்​படுத்​தியுள்ளனர்.

இறந்த மாணவரின் உடலை இந்​தியா கொண்டு வரு​வதற்கு மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் தேவை​யான உதவி​களை செய்ய வேண்​டும்​ என்​று முன்​னாள் மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங் அல்​வார் தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.