சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த ‘சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி’யில் ‘சென்னைஸ் அமிர்தா’ மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

SICA எனப்படும் ‘தென்னிந்திய சமையல் கலை வல்லுனர்கள் சங்கம்’ சென்னையில் நடத்திய இந்த போட்டியில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 3200-க்கும் மேற்பட்ட பிரபலமான சமையல் கலை வல்லுனர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். அவர்களோடு போட்டியிட்டு, வென்று, தங்கப்பதக்கங்களை அள்ளி எடுத்த சென்னைஸ் அமிர்தா’ மாணவர்கள், சமையல் கலையின் சர்வதேச நடுவர்களின் பாராட்டு மழையிலும் நனைந்திருக்கிறார்கள்.

சென்னைஸ் அமிர்தா
சென்னைஸ் அமிர்தா

சென்னைஸ் அமிர்தா மாணவர்களுக்கு இத்தகைய பெருமைகள் கிடைக்க அவர்களது அறிவாற்றல், கலைநுணுக்கம், புத்தாக்க சிந்தனை, கடும்உழைப்பு, நுட்பமான வேலைப்பாடு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவைகள் காரணமாக இருந்திருக்கின்றன. பிரமாண்டமான அந்த போட்டிக் களத்தில் அவர்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு 26 தங்கப்பதக்கங்கள் வென்று, ‘சென்னைஸ் அமிர்தா’வின் புகழை, சமையல் கலை சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறித்திருக்கிறார்கள்.

சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் வடித்த காய்கறி, பழம், வெண்ணெய் சிற்பங்கள் உலகளாவிய ஊடகங்களிலும் வெளியாகி, சென்னைஸ் அமிர்தாவின் புகழை விண்ணுக்கு கொண்டு சென்றது.

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கம் இந்தியாவில் நடத்திய போட்டியில் 26 தங்கம் வென்ற தங்கங்களை கௌரவிக்க, சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் அவர்கள் பெருமிதத்தோடு பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தினார். சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியில் 2025 அக்டோபர் 14-ந்தேதி இந்த நிகழ்வு விமரிசையாக நடந்தது. தங்க வேட்டையாடி பதக்கங்களை குவித்த மாணவர்கள், உலக வல்லுனர்களோடு ஒருங்கிணைத்து போட்டியிட்டு வெற்றிபெற்ற நிகழ்வை விலாவாரியாக பெருமிதத்தோடு பகிர்ந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகொடுத்து, அவர்களை அற்புதமாக வழிநடத்தி, தங்கப்பதக்கங்களை வெல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்த ‘கார்விங்’ பயிற்சியாளர்கள் கரவொலிக்கு மத்தியில் கௌரவிக்கப்பட்டனர் பயிற்சியாளர் செப்’ கார்த்திக்கிற்கு ரொக்கப் பரிசு ஒரு லட்சம் ரூபாயும், பயிற்சியாளர் செந்திலுக்கு இருபது ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

சென்னைஸ் அமிர்தா
சென்னைஸ் அமிர்தா

ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த இதர பயிற்சியாளர்களும், தங்கம் வென்ற அனைத்து மாணவர்களும் ரொக்கப் பரிசுகளால் கௌரவிக்கப்பட்டனர். டெல்லியில் நடந்த ICC போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற மாணவர்களும் பெருமைமிகு பாராட்டினைப் பெற்றனர். வெற்றியடைந்த மாணவர்கள் உருவாக்கிய பட்டர் கார்விங், பழம் மற்றும் காய்கறி கார்விங் அங்கு வந்த விருந்தினர்களையும் ஊடகங்களையும் கவர்ந்தன.

இந்த நிகழ்வில் இன்னொரு மைல்கல் சாதனையை நிகழ்த்திய மாணவி செல்வி.கீர்த்தனாவை சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் வெகுவாக பாராட்டி, ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தார். மாணவி கீர்த்தனா அழகப்பா பல்கலைக்கழகத்திலேயே முதல் இடத்தைப் பிடித்த சாதனை மாணவி என்பதும், தமிழக கவர்னரிடம் இருந்து விருதினை பெற்றவர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

சென்னைஸ் அமிர்தா
சென்னைஸ் அமிர்தா

“சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் எங்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சிகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு முறை நாங்கள் பதக்கங்களை வெல்லும்போதும் எங்கள் கல்லூரியின் தலைவர் ஆர்.பூமிநாதன் அவர்கள் மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கி எங்களை மீண்டும் மீண்டும் சாதிக்கத் தூண்டுகிறார் அவரது வழிகாட்டுதலே எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம்” என்று, தங்கம் வென்ற மாணவர்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

பெருமைமிகுந்த இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கல்லூரியின் தலைவர் ஆர்.பூமிநாதன் முத்தாய்ப்பாக சில கருத்துக்களை வெளிப்படுத்தினார். “சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் சமையல் கலை உலகமே திரும்பிப் பாார்க்கும் அளவுக்கு சாதனைகளைப்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.