தோனி ஓய்வு? சஞ்சு சாம்சன் என்ட்ரி – சிஎஸ்கே-வில் நடக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்

Dhoni : இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) “தல” என ரசிகர்களால் கொண்டாடப்படும் எம்.எஸ். தோனி, இந்த ஆண்டுடன் ஓய்வு பெறலாம் என்ற பேச்சு மிகப்பெரிய அளவில் உள்ளது. அதனாலேயே தோனிக்கு மாற்றாக சரியான பிளேயரை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே தன்னுடைய அனைத்து அஸ்திரங்களையும் வீசத் தொடங்கிவிட்டது. இப்போது, தோனியின் விக்கெட் கீப்பர் பேட்மேன் இடத்துக்கு சரியாக இருப்பார் என சிஎஸ்கே தேர்வு செய்து வைத்திருக்கும் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடத்தில் இருக்கிறார். இதனால், அவரை எப்படியாவது அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற  முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வர்த்தக பேச்சுகளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் தொடங்கிவிட்டது.

Add Zee News as a Preferred Source

ஆனால், ராஜஸ்தான் அணியோ, சாம்சனை விடுவிப்பதில் உறுதியாக இருந்தாலும், அவரை வைத்து ’வரும் வரை லாபம்’ என்ற அளவில் ஒரு வர்த்தக கேமை ஆடிக் கொண்டிருக்கிறது. 5 ஐபிஎல் அணிகளுக்கு இடையே அவரை வர்த்தகம் செய்ய பேசியிருக்கிறது. அந்த அணியைப் பொறுத்தவரை சாம்சன் எப்படியும் இம்முறை அணியை விட்டு செல்வதால், அவரை தேவைப்படும் அணிகள் எந்த டிமாண்ட் வைத்தாலும் வாங்கியே விரும்புவார்கள் என்ற புள்ளியில், எல்லாத விதமான டிமாண்டுகளையும் முன்வைக்கிறது. 

ஏனென்றால், சஞ்சு சாம்சன் ஒரு நல்ல கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும், ஓப்பனிங் மற்றும் பின்வரிசையிலும் விளையாடக்கூடிய திறமை உள்ளவராக இருக்கிறார். அதனால், ஐபிஎல் அணிகள் மத்தியில் அவருக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. இப்போதைக்கு இப்படியான ஒரு பிளேயரையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேடிக் கொண்டிருக்கிறது. அதனால், ராஜஸ்தான் அணியுடன் சிஎஸ்கே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நிலையில், ராஜஸ்தான்  அணியும் தங்களுக்கான பிளேயர்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்துகிறது. குறிப்பாக, ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் கேட்கிறது. அவருடன் இன்னொரு பிளேயரையும் கூடுதலாகவே கேட்பதாலேயே இரு அணிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்துக்கும் முந்தைய நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும் மற்ற அணிகளுடனும் ராஜஸ்தான் அணி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. டெல்லி கேபிடல்ஸ் (DC), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) ஆகிய அணிகளும் சாம்சனை வாங்க ஆர்வம் காட்டியிருக்கின்றன. இப்போதைய சூழலில் சாம்சனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே முன்னணியில் இருக்கிறது.

ராஜஸ்தான் அணிக்கு கிடைக்கும் நன்மைகள்

சஞ்சு சாம்சனைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் பதிலாக, அவரை வர்த்தகம் செய்வதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கிடைக்கும் நன்மைகள் மிக முக்கியமானவை.

1. ஏலத்தில் பணத்தைக் கொடுத்து ஒரு வீரரை வாங்குவதற்குப் பதிலாக, வர்த்தகம் மூலம், தாங்கள் மிகவும் விரும்பும் மற்றும் தங்கள் அணிக்குத் தேவையான குறிப்பிட்ட வீரரை உதாரணமாக ஜடேஜா போன்ற தரமான ஆல்-ரவுண்டர் நேரடியாகப் பெற முடியும். 

2. RR அணிக்கு எப்போதும் மிடில் ஆர்டரில் ஒரு வலுவான ஃபினிஷர் அல்லது பந்துவீசக்கூடிய ஆல்-ரவுண்டர் தேவைப்படுகிறார். சாம்சனை வர்த்தகம் செய்து ஜடேஜாவைப் பெறுவதன் மூலம், அவர்களின் பலவீனமான பகுதியை உடனடியாக நிவர்த்தி செய்து, அணியின் சமநிலையை வலுப்படுத்த முடியும்.

3. சாம்சனின் அதிகச் சம்பள மதிப்புக்குச் சமமான ஒரு வீரரை வர்த்தகம் செய்வதால், RR தங்கள் ஏலப் பணப்பையிலிருந்து (Purse) பெரிய தொகையைச் செலவழிக்க வேண்டிய தேவை இருக்காது.

About the Author


S.Karthikeyan

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.