புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி நேற்று தனது 98-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதைத் தொடர்ந்து அவருக்கு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எல்.கே. அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உயர்ந்த தொலைநோக்கு மற்றும் அறிவுத்திறனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஓர் அரசியல்வாதியான அத்வானியின் வாழ்க்கை நாட்டின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வு, உறுதியான கொள்கைகளுக்கு சொந்தக்காரர் அத்வானி.
அவரது பங்களிப்புகள் இந்தியாவின் ஜனநாயக மற்றும் கலாச்சார நிலப்பரப்பில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன. அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.