தமிழகத்தில் பதிவு உரிமம் பெறாத மருத்துவமனை, கிளீனிக் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

சென்னை: தமிழகத்​தில் பதிவு உரிமம் பெறாத மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள், ஆய்​வகங்​கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் இயக்​ககம் முடிவு செய்​துள்​ளது. தமிழகத்​தில் 85 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள், சிறிய அளவி​லான மருத்​துவ மையங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

மருத்​து​வ​மனை​கள், கிளீனிக்​கு​கள் பதிவு உரிமம்​பெறு​வது அவசி​யம் ஆகும். அதே​போல், 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை உரிமத்​தைப் புதுப்​பிக்க வேண்​டும். இதற்​காக 2018-ம் ஆண்டு தமிழக மருத்​துவ நிறு​வனங்​கள் முறைப்​படுத்​துதல் திருத்​தச் சட்​டம் கொண்டு வரப்​பட்​டது. அதில் அரசு, தனி​யார் மருத்​து​வ​மனை​கள் மட்​டுமின்​றி, சித்​தா, ஆயுர்​வேதம், ஹோமியோப​தி, யுனானி மருத்​து​வ​மனைகளும் பதிவு செய்​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

அதற்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான அவகாசம் அவ்​வப்​போது வழங்​கப்​பட்டு வரு​கிறது. ஆனால், அந்த கால​கட்​டத்​தில் மிகக் குறைந்த எண்​ணிக்​கையி​லான மருத்​து​வ​மனை​கள் மட்​டுமே விண்​ணப்​பங்​களை சமர்ப்​பித்​தன. இதையடுத்து பதிவு உரிமம் கோரி விண்​ணப்​பிக்​காத மருத்​து​வ​மனை​கள் மீது நடவடிக்கை எடுப்​பது குறித்து மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​ககம் (டிஎம்​எஸ்) ஆலோ​சித்து வரு​கிறது.

விண்​ணப்​பிக்​காத மருத்​து​வ​மனை​களுக்கு முதல்​கட்​ட​மாக நோட்​டீஸ் அனுப்​பபபடும். அதனை​யும் பொருட்​படுத்​​தா​விட்​​டால்​ நடவடிக்​கை எடுக்​கப்​படும் என்​று அதி​காரி​கள்​ தெரிவிக்​கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.