"என் தம்பிங்க இல்லனா நான் இல்ல; இந்த சினிமா உலகத்தை அவுங்க தான் காமிச்சாங்க"- கண் கலங்கிய தேவா

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி காலமானார்.

அவருடைய நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று (நவம்பர் 09) நடைபெற்றது.

அதில் சபேஷ் குறித்து பேசிய இசையமைப்பாளர் தேவா, ” என் தம்பி சபேஷ் சின்ன வயசுல இருந்தே அமைதியாகத்தான் இருப்பான் .

சபேஷ்
சபேஷ்

எந்த கஷ்டத்தையும் வெளியில் சொல்ல மாட்டான். அவன் பிறந்ததுல இருந்து இறந்தது வரை மொத்தமாவே 1 மணி நேரம் தான் அவன்கிட்ட பேசியிருப்பேன்.

கடைசி நேரத்துல கூட எதுவுமே சொல்லாம போயிட்டான். எங்க குடும்பத்துல முதன் முதல்ல கீபோர்ட் வாசிக்க அவன்தான் போனான்.

அதன் பிறகு தான் நாங்க எல்லோரும் சினிமாவுக்கு வந்தோம். வெளிநாடுக்கு முதன் முதல்ல போனதும் அவன்தான்.

எங்க குடும்பத்துல எல்லா விஷயத்தையும் முதன் முதல்ல அவன்தான் பண்ணான். அதேபோல இறப்பிலும் எங்களுக்கு முன்னாடியே சென்றுவிட்டான்.

இசையமைப்பாளர் தேவா
இசையமைப்பாளர் தேவா

15 வருஷமா நானும் என் தம்பிகளும் காலையில 7 மணிக்கு ஸ்டூடியோவுக்கு வந்து நைட் 11 மணிக்கு தான் போவோம்.

அதனால அவனை என்னால மறக்க முடியல. என் தம்பிங்க இல்லனா நான் இல்ல.

இந்த இசையமைப்பாளர் என்ற பதவியே எனக்கு வந்திருக்காது.

இந்த சினிமா உலகத்தை என் தம்பிங்க சபேஷ், முரளி இரண்டு பேரும்தான் காமிச்சாங்க” என கண்கலங்கி பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.