Mohammed Shami: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 14ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இத்தொடருக்கு முன்னபாக பயிற்சி போட்டியாக இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகள் மோதின. முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியிலும் வெற்றியை நோக்கி சென்ற இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்கா ஏ அணி அதிர்ச்சி அளித்தது. அந்த அணி 417 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்டி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Add Zee News as a Preferred Source
தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
இந்த போட்டியில் முதலில் இந்திய அணிதான் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 221 ரன்கள் எடுத்து 34 ரன்கள் பின் தன்ங்கியது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா அணி 382 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 127, ஹர்ஷ் துபே 84 மற்றும் ரிஷப் பண்ட் 65 ரன்களை அடித்தனர். இதனைத் தொடர்ந்து 417 என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியது.
இதன் காரணமாக அந்த அணி 98 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஓரளவு நன்றாக பந்து வீசி இருந்தாலும், மற்ற பவுலர்கள் அனைவரும் 4 ரன் ரேட்டுக்கு அதிகமாக ரன்களை வழங்கி இருந்தனர். குறிப்பாக 22 ஓவர்கள் வீசிய ஆகாஷ் தீப் 106 ரன்களை வழங்கி 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தார். மறுபக்கம் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் குல்தீப் யாதவ் 17 ஓவர்கள் வீசி விக்கெட்கள் ஏதும் வீழ்த்தாமல் 81 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். 3
பாடம் கற்ற அஜித் அகர்கர்
இந்த நிலையில், தேர்வுக்குழுவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். முகமது ஷமியை ஓரம்கட்டிய நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர்கள் கூட சீனியர் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரன்களை குவிக்கின்றனர். முகமது ஷமி போன்ற ஒரு மூத்த சிறந்த பந்து வீச்சாளரை வாய்ப்பு கொடுக்காத தேர்வு குழுவிற்கு இது ஒரு நல்ல பாடம் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம் என கூறி வருகின்றனர்.
முகமது ஷமி 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின்னர் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றார். பின்னர் இந்திய அணியின் வாய்ப்புக்காக தொடர்ந்து காத்திருக்கிறார். அவர் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலாவது அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதிலும் இந்திய தேர்வுக்குழு அவரை ஓரம்கட்டி இருக்கிறது. இதன் காரணமாக அவரது கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி உள்ளது.
About the Author
R Balaji