டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு

புதுடெல்லி: டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய மருத்​து​வர் உமர் நபி​யின் உடலை அடை​யாளம் காண்​ப​தற்​காக அவருடைய தாயிட​மிருந்து டிஎன்ஏ சேகரிக்​கப்​பட்​டுள்​ளது.

டெல்​லி​யில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்​பில் உயி​ரிழந்​தவர்​களின் உடல்​கள் லோக் நாயக் மருத்​து​வ​மனை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. உடல்​கள் சிதைவடைந்​திருப்​ப​தால் டிஎன்ஏ மூலம் அடை​யாளம் காணும் பணி நடை​பெறுகிறது. இந்த சம்​பவத்​தில் வெடித்​துச் சிதறியது ஹுண்​டாய் ஐ-20 கார் என்​றும் அதை ஓட்டி வந்​தது காஷ்மீரின் புல்​வா​மாவைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் நபி என்​றும் தெரிய​வந்​துள்​ளது. முன்​ன​தாக பதி​வான சிசிடிவி காட்​சிகளின் அடிப்​படை​யில் இது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்​தி​ய​தாக சந்​தேகிக்​கப்​படும் உமர் நபி உயி​ரிழந்​தாரா அல்​லது தப்பி விட்​டாரா என்​பது தெரிய​வில்​லை. இதையடுத்​து, காஷ்மீரின் புல்​வாமா நகரை அடுத்த கோயில் கிராமத்​தில் உள்ள அவருடைய தாயின் டிஎன்​ஏ-வை அதி​காரி​கள் நேற்று சேகரித்​த​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அந்த டிஎன்​ஏவை வைத்து உமர் நபி இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தாரா உயிருடன் இருக்​கிறாரா என்​பதை அடை​யாளம் காண திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.
இந்த வழக்​கில் ஏற்​கெனவே கைதான மருத்​து​வர் முசாம்​மில் அகமது​வும் கோயில் கிராமத்​தைச் சேர்ந்​தவர் என தெரிய​வந்​துள்​ளது. முசாம்​மில் மற்​றும் உமர் நபி ஆகிய இரு​வரும் ஹரி​யா​னா​வின் அல்​-பலா மருத்​துவ கல்​லூரி​யில் பணி​யாற்றி வந்​தது தெரிய​வந்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.