கொல்கத்தா,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்த போட்டி குறித்து ..செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணி கேப்டன் கில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
இந்த இரண்டு போட்டிகளும் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நாங்கள் விளையாட வேண்டும் என்றால் இந்த போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும். தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அவர்கள் பலமானவர்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர்கள். எனவே அவர்களை வீழ்த்துவது என்பது எளிதான காரியமாக இருக்காது.இந்த டெஸ்ட் போட்டியில் பல சவால்கள் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால் ஒரே அணியாக நாங்கள் இந்த சூழலை பெரிதாக கையாளுவோம் என்று நம்புகிறேன். ஆசிய கண்டங்களில் உள்ள ஆடுகளங்களில் தென் ஆப்பிரிக்கா போன்ற அணியை எதிர்கொள்வது என்பது எப்போதுமே கடினமான விஷயம். ஆனால் இந்த சவாலை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்.என்று கூறினார்.