தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலுக்காக தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் யாதவை வேட்பாளராக நிறுத்தியது. எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ் மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவி மகந்தி சுனிதாவை வேட்பாளராக நிறுத்தியது.
கடந்த நவம்பர் 11 ஆம் தேதி ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 48.43 சதவீத வாக்குப்பதிவானது.

இந்த ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. காங்கிரஸ் வேட்பாளர் நவீன் யாதவ் 98,988 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி சுனிதா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பாஜக வேட்பாளர் லங்காலா தீபக் ரெட்டி டெபாசிட்டை இழந்தார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தெலங்கானா இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.