மருத்துவர் உமர் நபியின் கூட்டாளி டெல்லியில் கைது: வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ20 கார் வாங்கி கொடுத்தவர்

புதுடெல்லி: டெல்லி குண்​டு​வெடிப்​பின் முக்​கிய குற்​ற​வாளி அமீர் ரஷித் அலி கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இவர், குண்​டு​வெடிப்​புக்கு பயன்​படுத்​தப்​பட்ட காரின் உரிமை​யாளர் ஆவார்.

கடந்த 10-ம் தேதி டெல்​லி​யில் வெடிபொருள் நிரப்​பப்​பட்ட கார் வெடித்​துச் சிதறியது. இதில் 13 பேர் உயி​ரிழந்​தனர். காஷ்மீரின் புல்​வா​மாவை சேர்ந்த மருத்​து​வர் உமர் நபி, கார் குண்டு தாக்​குதலை நடத்​தி​யிருப்​பது உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது. இந்த வழக்கை தற்​போது தேசிய புல​னாய்வு அமைப்பு (என்​ஐஏ) விசா​ரித்து வரு​கிறது.

என்ஐஏ நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி அமீர் ரஷித் அலி கைது செய்​யப்​பட்டு உள்​ளார்.

டெல்லி குண்​டு​வெடிப்​புக்கு பயன்​படுத்​தப்​பட்ட கார், இவரது பெயரில் பதிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. ஜம்​மு​வின் சம்​போரா பகு​தியை சேர்ந்த அமீர் ரஷித் அலி டெல்​லிக்கு வந்து ஐ20 காரை வாங்கி தனது பெயரில் பதிவு செய்​துள்​ளார். இந்த காரிலேயே வெடிபொருட்​கள் நிரப்​பப்​பட்டு குண்​டு​வெடிப்பு நிகழ்த்​தப்​பட்டு இருக்​கிறது. இவருக்​கும் மருத்​து​வர் உமர் நபிக்​கும் நெருங்​கிய தொடர்பு இருக்​கிறது.

வழக்கு தொடர்​பாக இது​வரை 73 பேரிடம் விசா​ரணை நடத்தி உள்​ளோம். இதே வழக்கு தொடர்​பாக டெல்​லி, ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தர பிரதேச போலீ​ஸாரும் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

32 கார்​கள் பறி​முதல்: டெல்​லியை போன்று நாடு முழு​வதும் கார்​களை பயன்​படுத்தி வெடிகுண்டு தாக்​குதலை நடத்த ஜெய்ஷ் தீவிர​வாத அமைப்பு சதித் திட்​டம் தீட்​டி​யிருந்​தது என்ஐஏ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதைத் தொடர்ந்து டெல்​லி​யில் கேட்​பாரற்று நிறுத்​தப்​பட்டுஇருக்​கும் வாக​னங்​கள் பறி​முதல் செய்​யப்​படு​கின்றன. சந்​தேகத்​துக்கு உரிய 34 வாக​னங்​கள்​ பறி​முதல்​ செய்​யப்​பட்​டன. கார் குண்டுவெடிப்பை நடத்தியஉமர் நபி, பரிதாபாத்தில் தங்கியிருந்த வீட்டில் ரகசியமாக ஓர் ஆய்வகத்தை அமைத்துள்ளார். அவர் வெடிகுண்டு சோதனை நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.