சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்: மக்கள் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்தனர்

சென்னை: சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளில் வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பான வாக்​காளர் உதவி மையம் நேற்று நடை​பெற்​றது. தமிழகம் முழு​வதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், இப்​பணி​களை மேற்​கொள்​வ​தில் பொது​மக்​கள் பல்​வேறு சிரமங்​களை சந்​தித்து வரு​வதை கருத்​தில் கொண்​டு, சென்னை மாநக​ராட்சி சார்​பில், வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பாக வாக்​காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி முதல் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

வாக்​காளர்​களுக்கு ஏற்​படும் சந்​தேகங்​களுக்கு தீர்வு காணும் வகை​யில், இந்த உதவி மையங்​களுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. அதன்​படி, சென்னை மாநகரம் முழு​வதும் வாக்​குச்​சாவடி மையங்​களாக உள்ள பள்​ளி​களில் நேற்று காலை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்​கான உதவி மையங்​கள் தொடங்கி பணி​கள் நடை​பெற்​றன.

வாக்​குச்​சாவடி நிலைய அலு​வலர்​கள் வாக்​காளர்​களுக்கு கணக்​கீட்டு படிவங்​களை பூர்த்தி செய்​வதற்​கும் உரிய வழி​காட்​டு​தல்​களை​யும், ஆலோ​சனை​களை​யும் வழங்​கினர். பொது​மக்​கள் தங்​களது வாக்​குச்​சாடி மையங்​களாக செயல்​படும் பள்​ளி​களுக்கு காலை முதலே ஆர்​வ​மாக வந்து சந்​தேகங்​களை கேட்​டறிந்​து, படிவங்​களை பூர்த்தி செய்து சென்​றனர்.

சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளி​லும் இந்த உதவி மையங்​கள் நேற்று நடை​பெற்​றன. தொடர்ந்து நவ.25-ம் தேதி வரை மொத்​தம் 8 நாட்​களுக்கு இந்த உதவி மையங்​கள் நடை​பெற உள்​ளது. இதுதொடர்​பாக, வாக்​குச்​சாவடி அலு​வலர் கூறுகை​யில், “ உதவி மையத்​துக்கு வருபவர்​கள் பெரும்​பாலும் 2005-ம் ஆண்டு வாக்கு எங்கு இருந்​தது என்​பதை பார்த்து சொல்​லு​மாறு கேட்​டனர். அதற்​கான தகவல்​களை சரி​பார்த்து விண்​ணப்​பங்​களை பூர்த்தி செய்து தரு​கிறோம். இந்த உதவி மையத்தை பொது​மக்​கள் பயன்​படுத்​தி கொள்​ள வேண்​டும்​” என்​று தெரிவித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.