இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அவரது முதல் படத்தில் இருந்து இணை இயக்குநராக பணியாற்றி அவர் கூடவே இருக்கும் நண்பருக்கு கார் ஒன்றை பரிசளித்திருந்தார்.
காரை பரிசளித்த பிறகு பேசியிருந்த பிரதீப் ரங்கநாதன், “உங்களோட லாயல்டிக்கு என்னோட ஒரு சின்ன கிஃப்ட் இது. நல்ல வேலை செய்றீங்க. இது ஒரு தொடக்கம் தான்.

இன்னும் நீங்க நிறையப் பயணிக்கணும். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தன.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றி தெரிவித்து அந்த நண்பர் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” இது என்னுடைய முதல் கார்… என் நண்பன் கொடுத்த பரிசு. ஒரு சாதாரண கிஃப்ட் மட்டும் இல்ல.
நம்மிடையே இருக்கும் நம்பிக்கை மற்றும் நாம் இருவரும் பகிர்ந்த பயணத்துக்கான ஒரு அழகான சின்னம்.
இந்த அழகான நினைவைக் கொடுத்து, எப்போதும் என்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் பிரதீப் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி.
லவ் யூ அண்ணா!” என பதிவிட்டிருக்கிறார்.