புதுடெல்லி
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான புதிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னதாக ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிறப்பித்த புதிய உத்தரவின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் இதுவரை சட்டப்படி முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு, தற்போது ரூ.9,000 கோடியாக உயர்ந்துள்ளது.
Related Tags :