Middle Class Review: இது எமோஷன் கிளாஸா, காமெடி கிளாஸா? பாஸாகிறதா இந்த மிடில் கிளாஸ்?

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கார்ல் மார்க்ஸ் (முனீஸ் காந்த்), தன் மனைவி அன்பரசி (விஜயலட்சுமி), மகள், மகன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

சொந்த கிராமத்தில் விவசாய நிலம் வாங்கி, செட்டில் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கார்ல் மார்க்ஸ், தன் சொற்ப வருமானத்தாலும், குடும்பச் செலவு, பிள்ளைகளின் கல்வி போன்ற செலவுகளாலும் திண்டாடுகிறார்.

Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம்
Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம்

இந்நிலையில், மறைந்த தந்தை சிவபுண்ணியத்தால் (வேல ராமமூர்த்தி) தற்போது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கிறது.

ஆனால், கண்ணுக்கெட்டியது கைக்கு எட்டாமல் போவதோடு, பிரச்னைகளையும் சேர்த்து இழுத்து வருகிறது. அந்த ஜாக்பாட் என்ன, அதை கார்ல் மார்க்ஸின் குடும்பம் கைப்பற்றியதா, இறுதியில் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம் மாறியதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம்.

விஜய் லட்சுமியின் ‘ஹை பிட்ச்’ நடிப்பு காமெடி ஏரியாவில் கைகொடுத்திருந்தாலும், ஏனைய தருணங்களில் சிறிது தொந்தரவையே தந்திருக்கிறது.

வடிவேலு முருகனின் கவுன்ட்டர்கள் பிரச்னைகளுக்கு இடையே காமெடிகளைத் தூவுகின்றன. மொபைல் போனும் கையுமாகப் பேசிக்கொண்டேயிருக்கும் காளி வெங்கட்டை இன்னுமே அழுத்தமாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆட்டோ ஓட்டுநராக குரேஷி, துப்பறியும் நிபுணராக ராதாரவி, தந்தையாக வேல ராமமூர்த்தி, மனோதத்துவ மருத்துவராக மாளவிகா அவிநாஷ் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம்
Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம்

நேர்த்தியான ஒளியமைப்பாலும், ஆர்ப்பாட்டமில்லாத நகர்வுகளாலும் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு எதார்த்தத்தைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன்.

காமெடி, எமோஷன், பரபரப்பு என மூன்றையும் முடிந்தளவு கச்சிதமாக்க முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். குறிப்பாக, துப்பறியும் காட்சிகளைத் தொகுத்த விதம் சிறப்பு. ஆனால் நீளும்ம்ம்ம்ம் க்ளைமாக்ஸ் ஆவ்வ்வ்!

பிரணவ் முனிராஜ் இசையில் ‘தேன்கூடே’ பாடல் தித்திக்க, ஏனைய பாடல்கள் திரையோட்டத்தோடு வந்து போகின்றன. பின்னணி இசையாலும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் பிரணவ் முனிராஜ்.

நடுத்தர வர்க்க குடும்பம், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பொருளாதார பிரச்னைகள், அது அவர்களின் குடும்பத்தைப் பாதிப்பது, அவற்றோடு அவர்கள் போராடுவது எனக் கதைக்கருவைத் தொடக்கத்திலேயே தொட்டுவிடுகிறது படம்.

விஜயலட்சுமியின் எம்.எல்.எம் பிசினஸ், புடவை வியாபாரம், முனீஸ் காந்த் குடும்பம் எடுக்கும் யூடியூப் சேனல் அவதாரங்கள் போன்றவை கலகலப்பூட்டினாலும், அவை ஓவர் டோஸ் ஆவதும், அவ்வகையான காட்சிகள் ரிப்பீட் அடிப்பதும் எதார்த்தத்தைக் குலைக்கின்றன.

Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம்
Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம்

மீண்டும் கதைக்குள் வரும் படம், எமோஷன் – காமெடி என இரண்டையும் மாற்றி மாற்றி உரசியபடியே நகர்கிறது. ஆனாலும், ஜாக்பாட் கன்ட்டென்ட்டைத் தொட்ட பிறகு, இறுதிக்காட்சி வரைக்கும் யூகிக்கும்படியான பாதையிலேயே போவது பெரிய மைனஸ்.

மொத்தமாகவே முதற்பாதி, சில காமெடிகள், சில எமோஷன்கள், யூகிக்கும்படியான ஒரு ட்விஸ்ட் எனப் பாஸ் ஆகிறது.

இரண்டாம் பாதியைச் சுவாரஸ்யமாக்க, துப்பறியும் கிளைக் கதையைக் கையிலெடுக்கும் திரைக்கதை, அதை இஷ்டத்திற்கு நீட்டி முழக்கியிருக்கிறது. துப்பறிதல், மனோதத்துவ சோதனை போன்றவை ஐடியாக்களாகக் கவனிக்க வைத்தாலும், அதை மேலோட்டமாக அணுகி, வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது திரைக்கதை.

பைக்கின் பெட்ரோல் டேங்க் பை ஐடியா மட்டும் சுவாரஸ்யம்! எமோஷன் மீட்டரை எகிற வைக்க, மிடில் கிளாஸின் பிரச்னைகளை நித்தம் சமாளித்துக்கொண்டிருக்கும் விஜயலட்சுமி கதாபாத்திரத்திற்கு வில்லன் பெயின்ட் அடித்தது ஓவர் பாஸ்!

மேலும், தொடக்கத்தில் மிடில் கிளாஸின் பொருளாதார பிரச்னைகளைப் பேசிவிட்டு, அவற்றுக்கான சரியான காரணத்தை அடையாளப்படுத்தி, தீர்வை முன்வைக்காமல் சொந்த குடும்பத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது அபத்தம்!

Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம்
Middle Class Review | மிடில் கிளாஸ் விமர்சனம்

அதனால், இறுதிக்காட்சி வரை அடுக்கப்படும் ஹெவி டோஸ் எமோஷன் காட்சிகள் எவ்விதத் தாக்கத்தையும் தராமல் அயற்சியையே தருகின்றன. ஜாக்பாட் மீதான எதிர்பார்ப்பை இறுதி வரை இழுத்துப் பிடித்ததும், ஆங்காங்கே ஆறுதல் தரும் ஒன்லைன் காமெடிகளும் ஆசுவாசம் தருகின்றன.

மிடில் கிளாஸ் பிரச்னைகளை வைத்து காமெடியாக கிளாஸ் எடுப்பதா, எமோஷனாக கிளாஸ் எடுப்பதா என்ற குழப்பத்தால் ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆகிறது இந்த ‘மிடில் கிளாஸ்’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.