
சென்னை: சென்னையில் இன்று நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் நவ.20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமான திமுக அரசுக்கு எதிராக இன்று (நவ.17) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.