
சென்னை: மாநகராட்சி சார்பில் சென்னையில் 7 இடங்களில் நேற்று நடைபெற்ற ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமில் 2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக தங்கள் விவரங்களை பதிவு செய்து, ரேபிஸ் நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு, மைக்ரோ சிப் பொருத்திக்கொள்ள வேண்டும். செல்லப் பிராணி உரிமையாளர்கள் வலைதளத்தில் சென்று பதிவுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.