எடின்பர்க்,
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. எனவே சாலையில் முன் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக மாறின. அப்போது சாலையில் நடந்து சென்ற 2 பேர் மீது கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் அபெர்டீன்ஷையர் நகர சாலையில் சென்ற மாடி பஸ் பனிக்கட்டிகளுக்கு இடையே சிக்கி கொண்டது. மீட்பு படையினர் அந்த பனிக்கட்டிகளை அப்புறப்படுத்திய பிறகே பஸ் அங்கிருந்து புறப்பட்டது. இதனால் பல மணி நேரம் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வடக்கு பிராந்தியத்தில் கடும் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.