ஹனோய்,
ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் குவாங் நாம், தாக்லாங், கான் ஹோவா உள்பட 5 மாகாணங்களில் கடந்த வாரம் முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, 12 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியும், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.