பாகிஸ்தான்: துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – 3 ராணுவ வீரர்கள் பலி

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகரில் துணை ராணுவப்படையின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் வழக்கமான படை அணிவகுப்பு நடத்தினர்.

அப்போது, திடீரென துணை ராணுவ தலைமையகத்திற்குள் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தனர். துணை ராணுவ தலைமையக வாசல் வழியாக பயங்கரவாதிகள் நுழைந்தனர். அப்போது ஒரு பயங்கரவாதி தனது உடலில் கட்டி வந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தான். பயங்கரவாதி நடத்திய இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்

. எஞ்சிய 2 பயங்கரவாதிகளும் துணை ராணுவ தலைமையகத்திற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த முயன்றனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த வீரர்கள், பயங்கரவாதிகள் இருவரையும் சுட்டு வீழ்த்தினர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அதேவேளை, தற்கொலைப்படை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.