புதிய டாடா சியரா எஸ்யூவி: ரூ.11.49 லட்சம் முதல் நவீன அம்சங்களுடன் அறிமுகமானது | Automobile Tamilan

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அதிநவீன நுட்பங்களுடன், புதிய தலைமுறையினர் விரும்பும் வசதிகள் பெற்று உயர்தரமான லெவல்-2 ADAS சார்ந்த பாதுகாப்புடன் விலை ரூ. லட்சம் முதல் ரூ. லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு முதன்முறையாக வெளியான சியரா இந்திய எஸ்யூவி வரலாற்றில் மிக முக்கியமான மாடலாக பலரின் கனவு வாகனமாக மாறியிருந்த நிலையில் மீண்டும் புதிய சியராவின் பழைய நினைவுகளை கொண்டு வரும் மிக அழகான பக்கவாட்டு பின்புற கண்ணாடி சாளரம் சிறப்பாக வடிவமைத்துள்ளதால்,வெகுவாக அனைவரும் ஏற்றக் கொள்ள கூடியதாக அமைந்துள்ளது.

Tata Sierra

450mm தண்ணீர் உள்ள இடங்களிலும் பயணிக்கும் திறனை பெற்றிருப்பதுடன் நடுத்தர எஸ்யூவி சந்தையில் அதிக இடவசதி கொண்ட மாடலாக வந்துள்ள புதிய சியராவின் பூட்ஸ்பேஸ் 622 லிட்டர் கொடுத்திருப்பது மிகப்பெரிய அளவில் பொருட்களை எடுத்துச் செல்ல சிறப்பானதாகவும், லெக்ரூம், ஹெட்ரூம், இரண்டாவது வரிசை பயணிகளுக்கான மிக தாராளமான இடவசதி, 5 நபர்களுக்கான இருக்கை என பலவும் கவனிக்கதக்க அம்சங்களாகும்.

பாதுகாப்பு தரத்திலும் மிகவும் உறுதியான கட்டுமானத்துடன் நிகழ்நேர விபத்திலும் மிக சிறப்பானதாகவும் 5 ஸ்டார் ரேட்டிங்கை விட சிறந்த மாடலாகும். டிசைன் வடிவமைப்பிலும் மிகவும் தனித்துவமான கவனத்தை டாடா செலுத்தியுள்ள நிலையில் வெறும் 17 மிமீ இரட்டை எல்இடி மாடுல்யூ கொண்ட தட்டையான எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டிருப்பதுடன், மிகவும் மெலிதான எல்இடி டெயில் விளக்குகளை கொடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலே முதன்முறையாக மிக மெலிதான ஹெட்லைட் பெற்ற முதல் காராக வந்துள்ளது.

 Sierra SUV price list

 

சியராவின் என்ஜின் ஆப்ஷன்

இந்த புதிய சியரா மூலம் 1.5 லிட்டர் டீசல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என மூன்று விதமான ஆப்ஷனை கொண்டிருக்கின்றது. ஆல் வீல் டிரைவ் சியரா எதிர்காலத்தில் வரவுள்ளது.

4 சிலிண்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் ரெவோட்ரான் என்ஜின் பவர் 106ps மற்றும் 145 Nm டார்க் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

ஹைப்பர்ஐயன் 1.5 லிட்டர் 4 சிலிட்டர் TGDi டர்போ பெட்ரோல் என்ஜின் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் பவர் 160ps மற்றும் 255 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

4 சிலிண்டர் 1.5 லிட்டர் டர்போ டீசல் Kyrojet என்ஜின் DEF ஆயில் இல்லாத LNT நுட்பத்துடன் கூடியதாக வந்துள்ள சியரா எஸ்யூவி பவர் 118ps மற்றும் 260 Nm டார்க் ஆனது 6 வேக மேனுவல் மாடலும் 280Nm டார்க்கினை 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

tata sierra suv dashboardtata sierra suv dashboard

இன்டீரியர் வசதிகள்

இன்டீரியரில் கருப்பு மற்றும் சாம்பல் நிறம் என இரட்டை நிற கலவை பெற்று உள்ளே 5 இருக்கைகள் ஆனது வழங்கப்பட்டு டிஜிட்டல் கிளஸ்ட்டர், 5ஜி ஆதரவை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் உடன் பயணிப்பவருக்கான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என மூன்று திரைகள் உள்ளது.

பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தை கொண்டு, அனைத்து இருக்கைகளுக்கும் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் 3-புள்ளி சீட் பெல்ட்கள், இரட்டை மண்டல தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் தொலைபேசி சார்ஜர், இயங்கும் மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள், பின்புற சன்ஷேடுகள், 360-டிகிரி கேமரா, 22 விதமான பாதுகாப்பு சார்ந்த லெவல்-2 ADAS மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை இடம்பெற உள்ளது.  C-பில்லர் வரை நீண்டிருக்கும் பிரமாண்டமான பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்பட உள்ளது.

குறிப்பாக சியரா எஸ்யூவி மாடலில் Smart+, Pure, Pure+, Adventure, Adventure+, Accomplished மற்றும் Accomplished+ என மொத்தமாக 7 வேரியண்டுகளின் அடிப்படையில் 24 விதமான மாறுபாடுகளை மூன்று என்ஜினிலும் பெற்றுள்ளது.

ஆரம்ப நிலை Smart+ வேரியண்டில் 17-இன்ச் சக்கரங்கள், 6 ஏர்பேக்குகள், ஐடில் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், பின்புற ஜன்னல் சன்-ஷேட், ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், 4-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், எலக்ட்ரிக் அட்ஜஸ்ட் ORVM, ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் பின்புற ஏசி வென்ட்கள் ESP மற்றும் EPB உடன் எல்இடி ப்ரொஜெக்டர் விளக்கு என பவற்றை பெற்றுள்ளது.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.