Smriti Mandhana Wedding Stopped Reason : இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும் இருப்பவர், ஸ்மிருதி மந்தனா. இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருந்தது. ஆனால், எதிர்பாராமல் நடந்த சில நிகழ்வுகளால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மந்தனாவின் காதலர் குறித்த சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Add Zee News as a Preferred Source
ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் :
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் ஆக இருப்பவர் ஸ்மிருதி மந்தனா. இவரும், இந்திய திரைப்பட இசையமைப்பாளருமான பலாஷ் முச்சலும் பல ஆண்டுகளாக காதலர்களாக இருந்தனர். இவர்கள் திருமணம் செய்து கொள்வதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.
ஸ்மிருதி மந்தனாவிற்கு முச்சல் ப்ரப்போஸ் செய்யும் வீடியோவும், பின்னர் இதனை அவர் நடனமாடி கொண்டாடிய வீடியோவும் இணையத்தில் வைரலானது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்கப்பட்டு, ஹல்தி, மெஹந்தி உள்ளிட்ட விழாக்களும் நடந்தது. நவம்பர் 23ஆம் தேதி நடைபெற இருந்த திருமணம், எதிர்பாராத விதமாக நிறுத்திவைக்கப்பட்டது.
தந்தைக்கு மாரடைப்பு:
ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. தந்தை முழுமையாக குணமடையும் வரை, இந்த திருமணம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பலாஷும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. விசாரித்ததில் அவருக்கும் உடல்நலக்குறைவு என்பது தெரிய வந்தது.
வேறு பெண்ணுடன் தொடர்பு!
ஸ்மிருதி மந்தனா, தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து பலாஷுடன் இருக்கும் அனைத்து திருமணம் தொடர்பான பதிவுகளையும் நீக்கியிருக்கிறார். இதனால், திருமணம் நடக்குமா நடக்காதா என்கிற சந்தேகம் பெரிதாக எழுந்துள்ளது. இந்த சமயத்தில்தான், பலாஷ் வேறு ஒரு பெண்ணிடம் flirt செய்ததாக சில ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாக தொடங்கின.
அந்த chatting-ல் அவர் மேரி டி கோஸ்டா என்கிற பெண்ணிடம் ஸ்விம்மிங் செய்ய அழைத்து flirt செய்த உரையாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. “ஸ்மிருதியை நீங்க லவ் பண்றீங்க தானே..அப்பறம் ஏன் என்னை கூப்பிடுகிறீர்கள்” என்று அந்த பெண் கேட்கிறார். அதற்கு பலாஷ் பதில் அளிக்காமல் அவாய்ட் செய்ததாக கூறப்படுகிறது. இந்த ஸ்கிரீன் ஷாட்கள் Reddit தளத்தில் வெளியானதில் இருந்து பலரும் பலாஷின் ப்ரொஃபைலுக்கு சென்று அவரை கமெண்டில் திட்டி வருகின்றனர். இதற்கு, பலாஷ் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
Fcking hell.
Palash Muchhal cheated on Smriti Mandhana. So all PDA & lover boy sh*t was a sham.
She’s beautiful, successful & smart yet she got cheated on by her long standing bf.
Dafuq is going on here. How can anyone find love these days man.#SmritiMandhana pic.twitter.com/75TuL2yFH5
— StrangelyAmusing (@Weirdgripping84) November 25, 2025
பலாஷின் சகோதரி மட்டும், ஸ்மிருதியின் தந்தைக்காகத்தான் திருமணம் தள்ளிப்போடப்பட்டிருப்பதாகவும், இந்த நேரத்தில் குடும்பத்தினருக்கு ப்ரைவசி கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். பலாஷின் தாயாரும், தனது மகன் மந்தனாவின் தந்தையுடன் மிகவும் நெருக்கமானவர் என்றும் அவருக்கு உடல்நிலை சரியில்லாத செய்தியை கேட்டு, அழுது அழுது அவருக்கும் உடல்நிலை சரியல்லாமல் போனதாகவும் கூறியிருக்கிறார். இத்திருமணம் நடக்குமா நடக்காதா என்பது நாட்கள் செல்ல செல்லத்தான் தெரியும்.
About the Author
Yuvashree