சென்னை: “தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என, தனது மகன் மற்றும் துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பாராட்டி உள்ளார். இளைஞரணிச் செயலாளராக, விளையாட்டுத்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும் போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். தி.மு.கழக இளைஞரணிச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும் விளங்கும் உதயநிதி ஸ்டாலின், தனது 49ஆவது பிறந்தநாளையொட்டி, நாளின் தொடக்கத்தில் […]