மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பும் விராட் கோலி, ரோகித் சர்மா?

Will Virat Kohli and Rohit Sharma play Test Cricket again: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில், அத்தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று வரலாற்றை மாற்றி எழுதியது. இந்த அணி போராடி வீழ்ந்திருந்தால் பராவில்லை, இரண்டு போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்கா அணி ஆதிக்கம் செலுத்தி இருந்தது. இதன் காரணமாக இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பயிற்சியாளர் கம்பீரை பலரும் சாடினர். குறிப்பாக இந்திய அணி சொத்த மண்ணில் இப்படி வீழ்ந்ததற்கு மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுததுதான் காரணம் என எக்கச்சக்க விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

Add Zee News as a Preferred Source

Test Cricket: மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் திரும்பும் கோலி, ரோகித்? 

இந்த சூழலில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விகளுக்கு பின்னர், பிசிசிஐ தரப்பில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க முயற்சி நடப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், நேற்று (நவம்பர் 30) ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருப்பதாக பரவி வரும் வதந்திகள் குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பிட்டர்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 

அந்த பதிவில், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகளில் நான் எல்லா நேரங்களிலும் நான் நம்புவது இல்லை. ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வருகிறார்கள் என்ற் செய்தி பாதி உண்மையாக இருந்தாலும் அந்த செய்திக்கு நாம் அதிக கவனம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் அழிந்துவிடுமோ என்ற தலைப்பு அதிகம் பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. எனவே கிரிக்கெட்டின் ஸ்டார் வீரர்களாக திகழும் ரோகித், கோலி மீண்டும் விளையாட விரும்பினால், அவர்கள் நிச்சயம் விளையாட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

BCCI Secretary Devjit Saikia: தேவ்ஜித் சைக்கியா விளக்கம்

இதற்கிடையில், பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியாவும் இது குறித்து விளக்கி உள்ளார். விராட் கோலி இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் வருகிறார் என்ற தகவல் அனைத்தும் வதந்திகளே. இது குறித்த எந்த பேச்சுவார்த்தையும் எங்களிடம் விராட் கோலி நடத்தவில்லை. எனவே சமூல வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி உள்ளார். 

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் டி20 கிரிக்கெட் வடிவில் இருந்து ஓய்வை அறிவித்தனர். அதன் பின் இந்த ஆண்டு மே மாதத்தில் ரோகித் சர்மா முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து சில தினங்களில் விராட் கோலியும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். தற்போது இருவரும் இந்திய ஒருநாள் அணிக்காக விளையாடி வருகின்றனர். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 123 போட்டிகளில் விளையாடி 9230 ரன்களை குவித்துள்ளார். இதில் 30 சதம் மற்றும் 31 அரைசதங்களும் அடங்கும். ரோகித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 4301 ரன்களை குவித்த அவர் 12 சதங்கள் மற்றும் 18 அரைசதஙக்ளை விளாசி இருக்கிறார். 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.