FD-ஐ விட இரட்டிப்பு லாபம்; 45-60 வயதில் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வது எப்படி? முழு விளக்கம்

“குழந்தைகள் படிப்பு முடிந்துவிட்டது அல்லது முடியப்போகிறது. வீட்டுக் கடன் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கையில் சில லட்சங்கள் சேமிப்பு இருக்கிறது. இனி என்ன செய்வது?”

உங்களில் பலர் இப்படி யோசித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த வயதில் வரும் இக்குழப்பம் இயல்பானது. ஒருபுறம் ஓய்வுக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது, இன்னொருபுறம் பணத்தை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது.

உங்கள் கடின உழைப்பின் பலன், இப்போது சரியாகக் கையாளப்பட வேண்டும். இல்லையென்றால், பல ஆண்டுகள் உழைத்த பலன் வீணாகிவிடும்.

நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் பாதுகாப்பு உணர்வு!

முதலீடு & குடும்ப பென்ஷன்...
முதலீடு & குடும்ப பென்ஷன்…

“பங்குச் சந்தை என்றால் ரிஸ்க். இந்த வயதில் நான் ரிஸ்க் எடுக்க முடியாது” என்று நினைக்கிறீர்கள். அதனால் FD-யில் பணத்தை வைத்துவிடுகிறீர்கள். நம் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நிம்மதி. ஆனால் உண்மை என்ன தெரியுமா?

2025 அக்டோபர் தரவுகளின்படி, FD வட்டி 7% கிடைக்கிறது. ஆனால் வரி கழித்து  (30% வருமான வரம்பில் இருந்தால்) உண்மையான வருமானம் 4.9% மட்டுமே! பணவீக்கம் சராசரியாக 5-6% என்று வைத்துக்கொண்டால், நம் பணத்தின் மதிப்பு ஒவ்வொரு வருடமும் குறைந்துகொண்டே போகிறது.

ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். இன்று 10 லட்சம் ரூபாய் FD-யில் போட்டால், 5 வருடங்களில் 13.5 லட்சமாகும். ஆனால் அதே காலத்தில், நம் குடும்பச் செலவுகள், மருத்துவச் செலவுகள் 40-50% உயர்ந்துவிடும்.

அப்போது 13.5 லட்சத்தின் வாங்கும் சக்தி இன்றைய 9-10 லட்சம் மதிப்புக்குத்தான் இருக்கும். நாம் பணத்தை வளர்க்கவில்லை, நாம் அதை மெதுவாக இழந்துகொண்டிருக்கிறோம்.

40களில் தொடங்காதவர்களுக்கு, 50கள் கடைசி வாய்ப்பு!

ரிட்டயர்மென்ட்
ரிட்டயர்மென்ட்

20 வயதில் SIP தொடங்கியிருந்தால், இன்று ஒரு கோடி சேர்த்திருக்கலாம். 30 வயதில் தொடங்கியிருந்தால், 50 லட்சம் சேர்த்திருக்கலாம். ஆனால் அப்போது நமக்கு நேரமில்லை, விழிப்புணர்வு இல்லை, கையில் பணம் இல்லை அல்லது தெரியாமல் போய்விட்டது. இப்போது 45-60 வயதில் இருக்கிறோம். இது நம் கடைசி ஓட்டம்.

AMFI (அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா)-வின் சமீபத்திய தரவு ஒரு ஆச்சரியமான உண்மையைச் சொல்கிறது: 45-58 வயது வரம்பில் உள்ளவர்கள், ஈக்விட்டி முதலீட்டை 49%-லிருந்து 66% ஆக உயர்த்தியுள்ளனர்.

அதாவது, இந்த வயதினர் முன்பை விட அதிகமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். ஏனென்றால் அவர்கள், FD மட்டும் போதாது, ஓய்வுக்காலத்திற்கு இரண்டாவது வருமானம் தேவை என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள்.

Lumpsum முதலீடு: எப்படி, எங்கே, எவ்வளவு?

Lumpsum Investor
investor

இப்போது உங்கள் கையில் 5, 10, அல்லது 20 லட்ச ரூபாய் இருக்கிறது. இதை FD-யில் போடுவதா, அல்லது மியூச்சுவல் ஃபண்டில் போடுவதா என்ற குழப்பம். ஒரு எளிய ஒப்பீட்டைப் பார்ப்போம்:

10 லட்சம் ரூபாய் FD-யில் போட்டால்:

  • 5 வருடத்தில்: 13.5 லட்சம்

  • 10 வருடத்தில்: 17 லட்சம்

10 லட்சம் ரூபாய் Hybrid Mutual Fund-ல் போட்டால் (12% சராசரி வருமானம்):

  • 5 வருடத்தில்: 17.6 லட்சம்

  • 10 வருடத்தில்: 31 லட்சம்

வித்தியாசம் பார்த்தீர்களா? 10 வருடத்தில் 14 லட்சம் கூடுதல் வருமானம்! இது உங்கள் ஓய்வுக்காலத்தில் மாதம் 25,000-30,000 ரூபாய் கூடுதல் வருமானமாக மாறும்.

AMFI அக்டோபர் 2025 தரவு: மியூச்சுவல் ஃபண்ட் AUM (மொத்த சொத்து) 79.87 லட்சம் கோடி ரூபாய். Hybrid funds-ல் மட்டும் 9,397 கோடி புதிய முதலீடு வந்துள்ளது. ஏனென்றால் மக்கள் புரிந்துகொண்டார்கள் – ரிஸ்க்கைக் குறைத்து, வருமானத்தை உயர்த்த hybrid funds சிறந்தது என்று.

பாதுகாப்பான Lumpsum முதலீட்டு முறை

investment
investment advice

“நான் 10 லட்சத்தை ஒரே நாளில் போடுவதா?” என்று கேட்கிறீர்களா? கண்டிப்பாக இல்லை. சரியான வழி இதுதான்:

1. முதலில் உங்கள் வயதிற்கேற்ற Conservative Hybrid Fund-ஐத் தேர்வு செய்யுங்கள். இதில் 25-35% பங்குச் சந்தை, 65-75% பத்திரங்கள் (bonds) இருக்கும். ரிஸ்க் குறைவு, ஆனால் 10-12% வருமானம் கிடைக்கும்.

2. Systematic Transfer Plan (STP) பயன்படுத்துங்கள். உங்கள் 10 லட்சத்தை Liquid Fund-ல் போட்டு, அதிலிருந்து 3-6 மாதங்களில் படிப்படியாக Hybrid Fund-க்கு மாற்றுங்கள். இதனால் சந்தை ஏற்ற இறக்கத்தைத் தவிர்க்கலாம்.

3. SEBI-யின் புதிய விதிகளின்படி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உங்கள் பணத்தை 30 நாட்களுக்குள் சரியாக முதலீடு செய்ய வேண்டும். இல்லையென்றால், நீங்கள் எந்தக் கட்டணமும் இல்லாமல் பணத்தைத் திரும்ப எடுக்கலாம்.

மேலும், ஒவ்வொரு ஃபண்டும் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறது என்பதை ‘stress test’ மூலம் சோதித்து, முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதனால் உங்களின் பணம் பாதுகாக்கப்படுகிறது.

இப்போது செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

investment
investment

உங்களுக்கு இன்னும் 10-15 வருடங்கள் மட்டுமே இருக்கின்றன. இப்போது சரியாக முதலீடு செய்யாவிட்டால்:

  • குழந்தைகளுக்குத் திருமணம் அல்லது வீடு வாங்க உதவ முடியாமல் போகும்.

  • திடீர் மருத்துவச் செலவுக்கு கையில் பணம் இருக்காது.

  • ஓய்வுக்காலத்தில் பிள்ளைகளின் உதவியை எதிர்பார்க்க வேண்டிவரும்.

  • நீங்கள் கனவு கண்ட சுதந்திரமான ஓய்வுக்காலம் நனவாகாது.

உங்கள் நண்பர்கள் சிலர் ஏற்கனவே இதைச் செய்துவிட்டார்கள். அவர்கள் இப்போது பயணங்கள் செய்கிறார்கள், பொழுதுபோக்கை அனுபவிக்கிறார்கள். நீங்கள் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும், இந்த வாய்ப்பை இழக்கும் நாளாகவே இருக்கும்.

உங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வு: லாபம் சிறப்பு ஆன்லைன் ஒர்க் ஷாப்!

“இது எல்லாம் புரிகிறது. ஆனால் நான் எங்கே ஆரம்பிப்பது? என் 10 லட்சத்தை எந்த fund-ல் போடுவது? எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம்?” – இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்க, ‘பாதுகாப்பு + வளர்ச்சி! லம்சம் முதலீட்டைப் பெருக்குவது எப்படி? 45 – 60 வயதினருக்கான வழிகாட்டல்’ என்ற சிறப்பு ஆன்லைன் ஒர்க் ஷாப்பில் கலந்துகொள்ளுங்கள்.

இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் தமிழ்நாடு, ஸோனல் ஹெட் பிரசன்னா வெங்கடேஷ், 90 நிமிடங்களில் உங்களுக்கு எல்லாவற்றையும் நடைமுறையில் விளக்குவார்.

லட்சம் முதலீட்டைப் பாதுகாப்பாக எப்படி வளர்க்க வேண்டும், ரிஸ்க்கை எப்படி கையாள்வது, எந்த ஃபண்டுகள் உங்களுக்கு ஏற்றது என்பதையெல்லாம் தெளிவாகக் கற்றுக்கொள்வீர்கள்.

இந்த ஒர்க் ஷாப் முடியும்போது, நீங்கள் நம்பிக்கையுடன், “இனி என் பணம் சரியான இடத்தில் போகும்” என்று நிம்மதியாக உணர்வீர்கள்.

நாள்: டிசம்பர் 3, 2025 (புதன்கிழமை)
நேரம்: மாலை 7:00 – 8:30 இந்திய நேரம்
மொழி: தமிழ்

75 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும். 

உங்கள் கடைசி ஓட்டத்தை வெற்றிகரமாக்க, இப்போதே பதிவு செய்யுங்கள்!

குறிப்பு: இக்கட்டுரை வங்கி FD-க்கு எதிரானதல்ல. மியூச்சுவல் ஃபண்டின் அனுகூலங்களை எடுத்துக்கூறவே அதனுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதாகும். முதலீடு செய்யும் முன் ஆவணங்களைப் படிக்கவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.