புதுடெல்லி,
இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருந்து வந்த ஹரேந்திர சிங் கடந்த திங்கட்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் ஹரேந்திர சிங் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாகவும், அவரது பயிற்சி முறை தற்போதைய காலத்துக்கு உகந்ததாக இல்லை என்று வீராங்கனைகள் இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு அளித்த புகாரை தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஆக்கி இந்தியா அவரை அதிரடியாக நீக்கியது தற்போது தெரியவந்துள்ளது.
Related Tags :