லாகூர்,
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பாகும். இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் நகர் அருகே சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை தெஹ்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு நடத்தி இருக்கலாம் என்று பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.