Jerusalem Masters Chess Championship 2025: ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இறுதிப்போட்டி இஸ்ரேலில் நடைபெற்றது. இத்தொடர் முழுவதும் இந்திய வீரர்களின் ஆதிக்கமே இருந்த நிலையில், இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இரண்டு பேருமே இந்தியர்கள். இப்போட்டியில் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அர்ஜுப்ன் எரிகைசி மோதிக்கொண்டனர். அனுபவம் பெற்ற ஒரு வீரர் ஒருபக்கம், வளர்ந்து வரும் இளம் வீரர் மற்றொரு பக்கம் என போட்டி முழுவதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது.
Add Zee News as a Preferred Source
ஜாம்பவான் ஆனந்தை வீழ்த்திய அர்ஜுன் எரிகைசி
போட்டி மிகவும் கடினமாக இருந்தது. முதல் இரண்டு ‘ரேபிட்’ சுற்றுகள் டிராவில் முடிந்தின. இருவரும் சிறு சிறு தவறுகள் செய்திருந்தாலும் வெற்றியை விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதன் காரணமாக யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்க ‘டை-பிரேக்கர்’ முறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், முதல் ‘பிளிட்ஸ்’ ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் விளையாடிய அர்ஜுன் 45 நகர்வுகளில் ஆனந்தை வீழ்த்தி, 55,000 அமெரிக்க டாலர் பரிசை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
சாம்பியன் அர்ஜுன் எரிகைசி
இந்த வெற்றிக்கு பின் பேசிய அர்ஜுன் எரிகைசி கூறியதாவது; “இது எளிதான வெற்றி அல்ல. ஆனந்த் சாருடன் விளையாடிய போட்டிகள் மிகவும் பதற்றமானவையாக இருந்தன. பிளிட்ஸ் சுற்றில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆட்டத்தின் நடுவில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதை எதிர்கொண்டு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.” என தெரிவித்தார்.
தோல்வியை வெற்றியாக மற்றிய அர்ஜுன்
கடந்த மாதம் கோவாவில் நடைபெற்ற செஸ் உலகக்கோப்பையில் காலிறுதிச் சுற்றில் சீன வீரர் வேய் யி என்பவரிடம் தோல்வியடைந்து வெளியேறிய அர்ஜுன், இத்தொடரின் மூலம் அந்த ஏமாற்றத்தை முழுமையாக களைத்துள்ளார். இத்தொடரின் அரையிறுதி போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் ரஷ்ய வீரர் இயன் நெபோம்னியாட்சியை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டினார். அதே சமயம், அர்ஜுன் பீட்டர் ஸ்விட்லரை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.இந்த வெற்றி இந்தியாவின் செஸ் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியதுடன், அர்ஜுனின் விளையாட்டு திறனை உலகத்திற்கு மீண்டும் நிரூபித்துள்ளது.
About the Author
R Balaji