CSK வீரரால் பறிபோன வாய்ப்பு.. இனி இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமே கிடையாது!

Riyan Parag Latest News: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். இந்த சூழலில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடும் 4வது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு விளையாடி வருகிறார்.

Add Zee News as a Preferred Source

CSK Ruturaj Gaikwad: சதம் அடித்து அசத்திய சிஎஸ்கே கேப்டன்

முதல் போட்டியில் சிறப்பாக விளையாடாத நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார் ருதுராஜ் கெய்க்வாட், அதேசமயம் தனக்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் சிறப்பாக விளையாட முடியும் என்பதை நிருபித்து இருக்கிறார். இதற்கிடையில் இந்திய ஒருநாள் அணியில் ரியான் பராக் விளையாட தகுதியானவர் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Riyan Parag: உள்ளூர் போட்டியில் நல்ல செயல்பாடு

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூலம் மக்கள் மத்தியில் தெரியவந்த ரியான் பராக் சமீப காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த 2024 இலங்கை டி20 தொடரில் இந்தியாவுக்காக விளையாடிய அவர் நல்ல ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார். அதன் பின்னர் காயம் காரணமாக வெளியேறிய அவர், அதில் இருந்து மீண்டும் தற்போது உள்ளூர் போட்டிஅக்ளில் விளையாடி வருகிறார். இந்த சூழலில், ரியான் பராக்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Ravichandran Ashwin On Riyan Parag: ரியான் பராக்கிற்கு இப்போதைக்கு இடமில்லை – அஸ்வின்

இந்த நிலையில், ரியான் பராக் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருவதை பார்த்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இப்போதைக்கு ரியான் பராக்கிற்கு இந்திய அணியில் இடமில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ரியான் பராக் ஒரு நல்ல வீரர், திறமைசாளி. அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 41 என்ற சராசரியை வைத்திருக்கிறார். ஆனால் இந்திய அணியில் தற்போது 5வது அல்லது 6வது இடத்தில் விளையாடுவதற்கான தேவை மட்டுமே இருக்கிறது. இதனால் இப்போதைக்கு ரியான் பராக் இந்திய அணியில் பொருந்த மாட்டார். ஏனென்றால், ஐபிஎல்லிலும் சரி, அசாம் அணிக்காகவும் சரி அவர் பெரும்பாலும் 3வது இடத்திலேயே விளையாடுகிறார்.

Riyan Parag vs Ruturaj Gaikwad: தன்னை நிருபிக்க வேண்டும்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் ஃபினிஷராக விளையாட முயற்சி செய்து நிருபிக்க முடியவில்லை. 3 அல்லது 4வது இடத்தில்தான் அவர் திறமையாக விளையாடுகிறார். தற்போது இந்திய அணியில் ருதுராஜுக்கு 4வது இடம் பொருந்தாது என பார்க்கப்பட்டது. ஏனென்றால் அவர் ஐபிஎல்லில் 3வது இடத்தில் விளையாடி இருந்தார். ஆனால், தனது பன்முகத்தன்மையை காண்பிக்க முயற்சித்தார். அதேபோல், இந்திய அணியில் இருக்கும் 5 அல்லது 6வது இடத்தை தம்மால் விளையாட முடியும் என ரியான் பராக் நிருபித்தால் மட்டுமே அவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.