கில் விளையாடுகிறாரா? சஞ்சு சாம்சன் தொடக்க வீரரா? சூர்யகுமார் யாதவ் பதில்!

India vs South Africa 1st T20: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (டிசம்பர் 09) தொடங்க இருக்கிறது. இந்திய அணியில் இத்தொடருக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் மீண்டும் வந்துள்ளனர். சுப்மன் கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ஏற்பட்ட கழுத்து வலியால் விலகினார். பின்னர் ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்டும் இந்த டி20 தொடரின் மூலம் இந்திய அணிக்கு திரும்பி உள்ளார். 

Add Zee News as a Preferred Source

மறுபுறம் ஹர்திக் பாண்டிய நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய அணியில் இணைந்துள்ளார். இந்த சூழலில், இவர்கள் இருவரும் தங்கள் உடற்தகுதியை நிருபித்தால்தான் விளையாட முடியும் என்ற நிலையை இருந்தது. இதனால் இவர்கள் பிளேயிங் 11ல் வருவார்களா? என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில், சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா குறித்து பேசி இருக்கிறார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். 

Shubman Gill, Hardik Pandya: கில், ஹர்திக் பாண்டிய விளையாடுவார்களா? 

நாளைய முதல் டி20 போட்டியை முன்னிட்டு இன்று (டிசம்பர் 08) அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இருவரும் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அணியில் உள்ளனர். ஹர்திக் பாண்டியாவின் அனுபவம் விலைமதிப்பற்றது. அவர் ஐசிசி போட்டிகள் உட்பட பல முக்கிய போட்டிகளில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரிடம் அந்த அனுபவம் நிறைய இருக்கிறது. அவரது இருப்பு நிச்சயமாக அணிக்கு நல்ல சமநிலையைக் கொடுக்கும் என்றார். 

Sanju Samson vs Shubman Gill: சஞ்சு சாம்சனை விட கில்தான் தொடக்க வீரருக்கு தகுதியானவர்

இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் குறித்து பேசினார். சஞ்சுவை பொறுத்தவரையில் அவர் அணிக்கு வந்தபோது டாப் ஆர்டரில் விளையாடினார். அவர் அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஷுப்மான் அவருக்கு முன் இலங்கை தொடரில் விளையாடியிருந்தார். எனவே, அவர் அந்த இடத்தைப் பிடிக்கத் தகுதியானவர். நாங்கள் சஞ்சுவுக்கு வாய்ப்புகளை வழங்கினோம். அவர் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக உள்ளார். அவர் மட்டுமல்ல, 3 முதல் 6 இடத்தில் விளையாட நாங்கள் அனைவருமே தயாராக இருக்கிறோம். எனவே, தொடக்க வீரர்களை தவிர நான் அனைத்து வீரர்களுக்கும் கூறும் விஷயம் இதுதான் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.