சென்னை: தவெக தலைவர் விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டத்துக்கு அம்மாநில காவல்துறை கடுமையான கெடுபிடிகளை அறிவித்து உள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வருவோர் கியூர் கோடு மூலமே அனுமதிக்கப்படுவர் என்றும், தமிழ்நாட்டில் இருந்து வரும் தவெகவினருக்கு அனுமதிகிடையாது என்றும் கூறி உள்ளது. புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை (டிச.9) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ‘ஏற்கனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், புதுச்சேரி அரசு அதற்கு அனுமதி மறுத்தது. ரோடு ஷோக்கு […]