சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளில், ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. கோவையில் டிசம்பர் 8ந்தேதி அன்று ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த […]