சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய ‘South Unbound’ நிகழ்ச்சி நேற்று (டிச.10) நடைபெற்றது.
பல இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக நான்கு மாநிலங்களில் 12,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அதில் 4000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி பிக் பாஸ் தொகுப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜியோ ஹாட்ஸ்டாரின் அடுத்த ஆண்டின் லைன் அப் அப்டேட்களையும் இந்த நிகழ்ச்சியில் அறிவித்தார்கள்.
அந்தவகையில் இந்த நிகழ்ச்சி மேடையில் ஜியோ ஹாட்ஸ்டாரில், விகடன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் ‘லிங்கம்’ வெப்சீரிஸின் புரொமோ வெளியிடப்பட்டது.
கதிர், திவ்யபாரதி நடிக்கும் இந்த வெப்சீரிஸை எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் இயக்கியிருக்கிறார்.
இந்த சீரிஸில் ஷோ ரன்னாராக இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜும் முக்கியமானதொரு பங்காற்றி இருக்கிறார்.
டிரெய்லர் வெளியீட்டிற்கு பிறகு விழா மேடையில் பேசிய விகடன் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ” ‘லிங்கம்’ என்ற கனவு நனவாகி இருக்கு. இந்த வெப்சீரிஸை எல்லோரும் பயங்கரமா என்ஜாய் பண்ணுவீங்க.

In every raid lies a buried rage#HotstarSpecials #Lingam | Coming Soon#SouthUnbound #JioHotstarSouthUnbound #JioHotstar #JioHotstarTamil#SrinivasanMD #Radhika #Radha #Kathir #Sathya #PoornimaRavi #DivyaBharathi #PrasanthPandiyaraj #Lakshmisaravanakumar pic.twitter.com/ltST4f12Qr
— JioHotstar (@JioHotstar) December 9, 2025
வஞ்சிக்கப்பட்டவன் ஒரு கேங்ஸ்டரா மாறுகின்ற ஒரு கதை தான் ‘லிங்கம்’ ” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.
” தொடர்ந்து பேசிய கதிர், ” ‘லிங்கம்’ நான் ஆசைப்பட்டு பண்ணின ஒரு வெப்சீரிஸ்.
பொதுவா எல்லோரும் யார் யாரோட பயோபிக்-லாம் பண்ணுவாங்க. நான் கேங்ஸ்டரோட பயோபிக் பண்ணிருக்கேன்.
எல்லோருக்கும் இந்த வெப் சீரிஸ் நிச்சயமா பிடிக்கும்” என்று கூறினார்.