சிஎஸ்கே வீரரை குறிவைக்கும் டெல்லி! ஏலத்தில் தட்டி தூக்க மெகா திட்டம்!

இந்தியன் பிரீமியர் லீக்2026-க்கான ஏலம் நெருங்கி வரும் வேளையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் தனது அணியை மறுசீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த சீசனில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், இந்த முறை அதிரடி மாற்றங்களை செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையை வலுப்படுத்த நான்கு முக்கிய வீரர்களை குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தனது கடந்த சீசன் ஓப்பனர்களான ஃபாப் டு பிளெசிஸ் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் ஆகியோரை விடுவித்துள்ளது. கே.எல். ராகுல் அணியில் தக்கவைக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு துணையாக ஒரு வலுவான மற்றும் அதிரடியான பார்ட்னர் தேவைப்படுகிறார். இந்த வெற்றிடத்தை நிரப்பவே புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்க டெல்லி அணி திட்டமிட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

டெல்லி குறிவைக்கும் 4 ஓப்பனர்கள்
ஜானி பேர்ஸ்டோ (Jonny Bairstow)

இங்கிலாந்தின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ. பவர் பிளே ஓவர்களில் பந்துகளை சிதறடிக்கும் திறன் கொண்டவர். கடந்த சீசன்களில் கடைசி நேரத்தில் மும்பை அணிக்காக விளையாடி, தனது சிறப்பான ஆட்டத்தால் கவனிக்கப்பட்ட இவர், டெல்லி அணியின் முதல் தேர்வாக கருதப்படுகிறார். விக்கெட் கீப்பிங் ஆப்ஷனும் இவரிடம் இருப்பது கூடுதல் பலம்.

ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra)

சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நியூசிலாந்தின் இளம் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, டெல்லி அணியின் மிக முக்கிய இலக்குகளில் ஒருவர். இடது கை பேட்ஸ்மேனான இவர், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரன் குவிப்பதோடு, இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் அணிக்கு உதவுவார். கே.எல். ராகுலுடன் இணைந்து இடது-வலது காம்பினேஷனை அமைக்க இவர் சிறந்த தேர்வு.

பிரித்வி ஷா (Prithvi Shaw)

டெல்லி அணியின் முன்னாள் வீரரான பிரித்வி ஷா, மீண்டும் டெல்லிக்கே திரும்ப அதிக வாய்ப்புள்ளது. உள்ளூர் போட்டிகளில் அவர் காட்டிய அதிரடி மற்றும் டெல்லி மைதானம் அவருக்கு கைவந்த கலை என்பதால், அவரை மீண்டும் ஏலத்தில் எடுக்க டெல்லி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது ஒரு Smart Buy ஆக இருக்கும்.

குயின்டன் டி காக் (Quinton de Kock)

நான்காவது இடத்திற்கு தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் அல்லது நியூசிலாந்தின் ஃபின் ஆலன் ஆகியோரில் ஒருவரை டெல்லி அணி குறிவைக்கலாம். டி காக் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் என்றால், ஃபின் ஆலன் டி20 போட்டிகளில் முதல் பந்திலிருந்தே சிக்ஸர் விளாசும் ‘பவர் ஹிட்டர்’ ஆவார்.

அணியின் தற்போதைய நிலை

ரூ.21.8 கோடி ஏலத் தொகையுடன் களமிறங்கும் டெல்லி அணிக்கு 5 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. எனவே, ரச்சின் ரவீந்திரா போன்ற ஆல்-ரவுண்டரை எடுப்பது அணிக்கு இரட்டை பலத்தை தரும் என நிர்வாகம் நம்புகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.