ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு மாதம் ரூ.8,600- கட்டணமா? எலான் மஸ்க் நிறுவனம் விளக்கம்

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில் அதிபருமானவர் எலான் மஸ்க். உலகம் முழுவதும் செயற்கைக்கோள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை கிடைக்க செய்வதற்கான ஸ்டார்லிங்க் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் தொடங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஸ்டார்லிங்க் சேவைக்கான கட்டண விவரங்கள் குறித்து அதிகாரபூர்வ வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டது. மாதாந்திர கட்டணம் ரூ.8 ஆயிரத்து 600 எனவும் ஒருமுறைக்கான நிறுவுதல் கட்டணம் ரூ.34 ஆயிரம் எனவும் வெளியானது.

இந்தநிலையில் ஸ்டார்லிங்க் தளத்தில் வெளியான விவரங்கள், தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டது எனவும் இணைய சேவைக்கான கட்டண விவரங்கள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.