சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல், இடையிலே பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் சமீபகாலமாக அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
சன்னி தியோல் 1983ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அறிமுகமான அடுத்த ஆண்டே ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அவர் அந்நேரம் காதல் படங்களில் அதிக அளவு நடித்து வளர்ந்து வரும் நடிகராக இருந்தார்.
சன்னி தியோல் 1984ஆம் ஆண்டு லண்டனில் லிண்டா தியோல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். லிண்டா பின்னர் தனது பெயரை பூஜா தியோல் என்று மாற்றிக்கொண்டார்.

பூஜா மற்றும் சன்னி தியோல் திருமணம் குறித்து வெளியில் தெரிய வந்தால், சன்னி தியோல் காதல் படங்களில் நடிப்பது பாதிக்கும் என்று தயாரிப்பாளர்கள் கருதினர். எனவே இந்த செய்தியை வெளியில் விடாமல் வைத்தனர்.
ஆனால் லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் அவர்களது திருமண புகைப்படங்கள் வெளியான பிறகு, அவர்களின் திருமணம் குறித்து வெளியில் தெரிய வந்தது.
யார் இந்த பூஜா?
சன்னி தியோல் திருமணம் செய்து கொண்ட பூஜாவின் தாயார் சாரா மஹால். தந்தை பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கிருஷ்ணன் தேவ். இதில், சாரா மஹால் பிரிட்டன் அரச குடும்பத்தோடு தொடர்புடையவர் ஆவார். அரச குடும்பத்தோடு தொடர்புடையவர் என்றாலும், பூஜா பொதுப் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
பூஜா சன்னி தியோலின் ஹிம்மத் படத்தில் நடித்துள்ளார். அதோடு, ஒரு படத்திற்கான கதையும் எழுதியுள்ளார். அந்த படத்தில் சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் தர்மேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.