வாஷிங்டன்,
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் லிக்னேஷ்குமார் பட்டேல் (வயது 38). இந்தியரான அவர் முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் எட்வர்ட்ஸ்வில் நகர போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விசாரணையில் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிபவர் போல முதியவர்களின் வீடுகளில் புகுந்து அங்கிருந்து பணம், நகை போன்றவற்றை திருடியது தெரிய வந்தது. இதன்மூலம் சுமார் ரூ.62 கோடி அளவுக்கு அவர் மோசடி செய்தது உறுதியானது. எனவே லிக்னேஷ்குமாருக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
Related Tags :