அபுதாபி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். கடைசி நேரத்தில் மேலும் 19 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.மினி ஏலம் தற்போது தொடங்கியுள்ளது. ஏலத்தை மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் நடத்துகிறார். இதில் முதல் வீரராக வந்த ஜேக் பிரேசர் மெக்கர்க்கை யாரும் ஏலத்தில் வாங்கவில்லை. இதனையடுத்து வந்த டேவிட் மில்லரை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு டேல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது.
இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை ஏலத்தில் வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மல்லுக்கட்டினர். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் விலகியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் கோதாவில் குதித்தது. இவரை வாங்க சென்னை – கொல்கத்தா இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இவரது விலை எகிறி கொண்டே சென்றது. இறுதியில் ரூ. 25.20 கோடிக்கு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
Live Updates
-
16 Dec 2025 7:32 PM IST
மனிசங்கர் முராசிங், இசாஸ் சவாரியா, ஜிக்கு பிரைட், ஆயுஷ் வர்தாக், உத்கார்ஷ் சிங், கரண் லால், நாதன் ஸ்மித், டேனியல் லேட்கன் ஆகியோரை யாரும் வாங்க முன்வரவில்லை.
-
16 Dec 2025 7:28 PM IST
அன்கேப்டு வீரர்களை வாங்குவதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆர்வம் காட்டின.
அதற்கேற்றவாறே அதர்வா என்ற வீரரை மும்பை அணி ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது.
மறுபுறம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அமித் குமார், பிரபுல் கீல் மற்றும் கிரெய்ன்ஸ் புலேட்ரா ஆகிய வீரர்களை அடிப்படை விலைக்கே (ரூ.30 லட்சம்) சீரான இடைவெளியில் வாங்கியது.
அதேபோல் கொல்கத்தா அணி சர்தக் ரஞ்சன் மற்றும் தக்ஷ் கம்ரா ஆகிய அன்கேப்டு வீரர்களை அடுத்தடுத்து வாங்கியது.
-
16 Dec 2025 7:19 PM IST
ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான கூப்பர் கோனோலியை ரூ. 3 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது.
-
16 Dec 2025 7:17 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஜை ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், அல்சாரி ஜோசப், ரிச்சர்ட் கிளீசன், தஸ்கின் அகமது, டேனியல் லாரன்ஸ் ஆகியோர் விலை போகவில்லை.
-
16 Dec 2025 7:15 PM IST
அன்கேப்டு வீரர்களை அணிகள் போட்டி போட்டு வாங்கினாலும் சில வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த வகையில் மொஹித் ரதி, கேசி கரியப்பா, தேஜாஸ் பரோகா, கேஎம் ஆசிப், மயங்க் ராவத், விக்கி ஓஸ்த்வால், தீரஜ் குமார், தனய் தியாகராஜன்,கானர் எஸ்டெர்ஹுய்சென், இர்பான் உமைர், சிண்டால் காந்தி, விஷால் நிஷாத் ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
-
16 Dec 2025 7:12 PM IST
முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அன்கேப்டு வீரர்களுக்கு குறிவைத்தது. அதில் ஓங்கார் தர்மலே, சாகிப் ஹூசைன் ஆகியோரை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது.
அதேவேளை சலீல் ஆரோரா என்ற வீரரை ரூ.1.50 கோடிக்கு வாங்கியது.
-
16 Dec 2025 7:07 PM IST
கவனம் ஈர்த்த அன்கேப்டு வீரர்கள்:
இந்த ஐ.பி.எல். ஏலத்தில் அன்கேப்டு வீரர்களை வாங்க அணி நிர்வாகங்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டின. இதனால் ஏலத்தில் அவர்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
-
16 Dec 2025 7:05 PM IST
மங்கேஷ் யாதவ் என்ற அன்கேப்டு வீரரை நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி ரூ.5.20 கோடிக்கு என்ற பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இவரை வாங்க ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெங்களூரு அணி ஏலத்தில் வென்றது.
-
16 Dec 2025 7:02 PM IST
டேனிஷ் மாலேவார் என்ற அன்கேப்டு வீரரை மும்பை அணி அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
மறுபுறம் அக்ஷத் ரகுவன்ஷி என்ற அன்கேப்டு வீரரை ரூ.2.20 கோடிக்கு லக்னோ வாங்கியுள்ளது.
-
16 Dec 2025 6:59 PM IST
அன்கேப்டு வீரரான அமன் கானை ரூ.40 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
மற்றொரு அன்கேப்டு வீரரான சாத்வித் தேஸ்வாலை ஆர்சிபி வாங்கியுள்ளது.
