IPL: 2026 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரம், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களை தயார் செய்யும் வகையில் வீரர்களை தேர்வு செய்துள்ளது. முதலில் மினி ஏலத்தை முன்னிட்டு நவம்பர் 15ஆம் தேதி அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைத்துக்கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளிட்டது. சில வீரர்களின் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில வீரர்கள் ஓய்வையும் அறிவித்தனர்.
Add Zee News as a Preferred Source
Delhi Capitals: ஓய்வை அறிவித்த டிசி வீரர்கள்
அந்த வகையில், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ஃபாஃப் டு பிளெசிஸ், மோகித் சர்மா ஆகியோர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். ஏற்கனவே கடந்த சீசனில் டெல்லி அணியின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு அந்த அணியில் இருந்த ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கு சென்றதும் மெகா ஏலத்தில் புதிய ஒரு இளம் வீரர்களை அமைத்ததுமே. மிட்செல் ஸ்டார்க், கே.எல். ராகுல், நடராஜன் என பலம் வாய்ந்த அணியாக டெல்லி காணப்பட்டது. இதன் காரணமாக 2025 ஐபிஎல் இறுதி போட்டி வரை செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் மாறாக நடந்தது. டெல்லி அணி ஓரளவான செயல்பாட்டையே வெளிப்படுத்தியது.
T Natarajan: 2026 சீசனிலாவது நடராஜனை பிளேயிங் 11ல் கொண்டு வருமா?
அதேபோல் அந்த அணியின் மேல் விமர்சனங்களும் இருந்தன. குறிப்பாக யார்க்கர்க்கு பெயர்போன நடராஜனை மெகா ஏலத்தில் ரூ. 10 கோடிக்கு எடுத்து சீசன் முழுவதும் களமிறக்காமல் இருந்தது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வரும் 2026 ஐபிஎல் சீசனிலாவது நடராஜனை பயன்படுத்துமா டெல்லி கேபிடல்ஸ் அணி என்ற கேள்வி எழுந்துள்ளது.
Delhi Capitals: ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி விடுவித்த மற்றும் தக்கவைத்துக்கொண்ட வீரர்கள்
DC Retained Players: தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: கேஎல் ராகுல், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்* (SA), அக்சர் படேல், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், திரிபுராண விஜய், மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க்* (AUS), டி.நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்த சமீர* (SL), குல்தீப் யாதவ், நிதிஷ் ராணா – RR இலிருந்து வர்த்தகம் செய்தது.
DC Released Players: டிசி விடுவித்த வீரர்கள்: டோனோவன் ஃபெரீரா* (SA) – RRக்கு வர்த்தகம், ஃபாஃப் டு பிளெசிஸ் (SA), ஜேக் ஃப்ரேசர்-மெக்ரூக்* (AUS), செடிகுல்லா அடல்* (AFG), மன்வந்த் குமார், மோஹித் ஷர்மா.
DC IPL Mini Auction Purchase: டெல்லி அணி மினி ஏலத்தில் வாங்கிய வீரர்கள்
அகீப் டார் (ரூ. 8.4 கோடி), பென் டக்கெட் (ரூ. 2 கோடி), டேவிட் மில்லர் (ரூ. 2 கோடி), பதும் நிசங்க (ரூ. 4 கோடி), லுங்கி என்கிடி (ரூ. 2 கோடி), கைல் ஜேமிசன் (ரூ. 2 கோடி), பிருத்வி ஷா (ரூ. 75 லட்சம்), மற்றும் சாஹில் 30 லட்சம்.
DC Best Playing XI For IPL 2026: 2026 ஐபிஎல் அணிக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் 11
பென் டக்கெட், பிருத்வி ஷா, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மிட்செல் ஸ்டார்க், டி. நடராஜன், அக்கிப் நபி, குல்தீப் யாதவ்
About the Author
R Balaji