Rohit Sharma Latest News: இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டில் முதல் முறையாக ஐசிசி ஒருநாள் கோப்பையை வென்றது. அதன்பின் 2011ஆம் ஆண்டு எம். எஸ். தோனி தலைமையில் வென்றது. இதையடுத்து ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லாத இந்திய அணி 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால், அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதி போட்டி வரை சென்றதே காரணம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த போட்டியில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இந்த தோல்வி சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு மிகப்பெரிய மனவலியை கொடுத்திருந்தது. இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தோல்விக்கு பின்னரே ஓய்வு அறிவித்துவிடலாம் என நினைத்தாக முன்னால் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
Rohit Sharma About Retirement: ஓய்வு குறித்து ரோகித் சர்மா
இது தொடர்பாக பேசிய அவர், அந்த தோல்வி உடலில் உள்ள அனைத்தையும் உறிஞ்சிவிட்டது. தோல்வியை தாங்குவது என்பது ஒரு கடினமான விஷயம். ஆனால் அதோடு வாழ்க்கை முடிந்துவிடவில்லை. தோல்வி ஒரு பாடமே. அதனால் இதில் இருந்து மீண்டும் எப்படி புதிதாக ஒரு பயணத்தை தொடங்குவது என்று சிந்தித்தேன். அடுத்த கட்டமாக டி20 உலகக் கோப்பை வருகிறது என அதில் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. கிரிக்கெட்டை விட்டு விலகிவிடலாம் என நினைத்தேன். ஆனால் விட முடியவில்லை. மீண்டு வர நேரமும் சக்தியும் தேவைப்பட்டது என ரோகித் சர்மா கூறினார்.
2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்ற தவறிய ரோகித் சர்மா, மிகுந்த மனவலியை சந்தித்திருக்கிறார். ஆனால் அந்த மனவலியை வென்று, மீண்டும் அதே உத்வேகத்துடன் பயணித்த அவர், இந்திய அணிக்கு அடுத்தடுத்த இரண்டு ஐசிசி கோப்பையை வென்றுக் கொடுத்தார். 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றார்.
2027 ODI World Cup: 2027-ஐ நோக்கி பயணம்
இந்த நிலையில், தற்போது ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒருநாள் அணியின் கேப்டன் பதவில் இருந்து நீக்கபட்டு, அந்த அணியின் ஒரு அங்கமாகவே விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ஓய்வை அறிவிக்காமல் பயணித்து வரும் அவர், 2023ல் விட்டதை 2027ல் பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் அந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து செயல்பட்டு வருகிறார். சமீபமாக அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரிலும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரிலும் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். இந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 650 ரன்களை குவித்துள்ளார். மேலும், வரும் 2026 ஜனவரி 11ஆம் தேதி தொடங்க உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்க உள்ளது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
Rohit Sharma: இந்தியாவுக்காக ரோகித் சர்மா
கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியாவுக்காக தனது பயணத்தை தொடங்கிய ரோகித் சர்மா, இதுவரை 277 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 11,516 ரன்கள் குவித்துள்ளார். 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்கள் 159 டி20 போட்டிகளில் விளையாடி 4231 ரன்களை அடித்துள்ளார். மொத்தமாக 50 சதங்கள் மற்றும் 111 அரைசதங்களையும் அடித்து அசத்தி இருக்கிறார். மேலும், கேப்டனாக இந்திய அணி இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji