IPL: 2026 ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் இடையே அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதற்கு சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலமே காரணம் ஆகும். அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரரகளை எடுத்துக்கொண்டது. இதன் பிறகு ஓரளவுக்கு அனைத்து அணிகளுமே பலமாக தெரிந்தாலும், குஜராத் டைட்டன்ஸ் அணி பலம் இழந்தே தெரிகிறது.
Add Zee News as a Preferred Source
கடந்த சீசனில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வென்று அரையிறுதி போட்டி வரை வந்தது. இதற்கு சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், கில் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடினர். ஆனால் இம்முறை இவர்களில் ஒருவர் சொதப்பினாலும் குஜராத் பாயிண்ட்ஸ் டெபிளின் பாதாளத்திற்கு சென்றுவிடும்.
தற்போது சுப்மன் கில் தனது பேட்டிங் ஃபார்மை இழந்து இருக்கிறார். அதேபோல் சாய் சுதர்சனும் சரியான ஃபார்மில் இல்லை. இது தொடரும் பட்சத்தில் குஜராத் அணிக்கு பிரச்சனையே. கண்டிப்பாக இவர்களில் ஒருவர் நிச்சயம் நல்ல ஃபார்மிற்கு திரும்ப வேண்டும். இவர்களுக்கு அடுத்ததாக ஜோஸ் பட்லர் உள்ளார். அவரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. பந்து வீச்சை பொறுத்தவரையில் ஓரளவு பலமாக காணப்படுகிறது குஜராத் அணி ககிசோ ரபாடா, முகமது சிராஜ், ரசித் கான் என வலுவாக உள்ளது. கடந்த ஐபிஏல்லில் அவர்கள் க்ளென் பிலிப்ஸை பயன்படுத்தவில்லை. ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்டை மும்பையிடம் டிரேட் செய்துள்ளதால், அந்த இடத்தில் இம்முறை க்ளென் பிலிப்ஸ் களமிறங்குவார் என தெரிகிறது.
குஜராத் டைட்டன்ஸ் தக்கவைத்துக்கொண்ட வீரரகள்
சுப்மன் கில் (கேட்ச்), சாய் சுதர்சன், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், ஜோஸ் பட்லர், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், அர்ஷத் கான், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா, குர்னூர் சிங் ப்ரார், கே சுதர் கான், சா மான், ரஷித் கான் யாதவ், க்ளென் பிலிப்ஸ்.
குஜராத் டைட்டன்ஸ் விடுவித்த வீரரகள்
ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (MIக்கு வர்த்தகம் செய்யப்பட்டார்), மஹிபால் லோம்ரோர், கரீம் ஜனத், தசுன் ஷனகா, ஜெரால்ட் கோட்ஸி மற்றும் குல்வந்த் கெஜ்ரோலியா.
குஜராத் அணி மினி ஏலத்தில் வாங்கிய வீரர்கள்
அசோக் சர்மா (ரூ. 90 லட்சம்), ஜேசன் ஹோல்டர் (ரூ. 7 கோடி), டாம் பேன்டன் (ரூ. 2 கோடி), பிருத்வி ராஜ் (ரூ. 30 லட்சம்), மற்றும் லூக் வுட் (ரூ. 75 லட்சம்).
2026 ஐபிஎல்லுக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் 11
சுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
About the Author
R Balaji