சென்னை: “இலவசங்கள் கொடுக்க திமுக அரசிடம் பணம் இருக்கு.. ஆனால், செவிலியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளர். அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய செவிலியர் பணியிடங்களை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழக அரசின் சுகாதாரத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் […]