இந்தோனேசியா: அரிய நோயால் குடும்பமே பாதிப்பு; சமூக ஊடகம் வாயிலாக பிரபலம்

ஜாவா,

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் மனுரங் என்ற குடும்பம் வசித்து வருகிறது. இவர்களில் 6 சகோதர சகோதரிகளில் 4 பேருக்கு அரிய வகை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களுடைய குடும்பத்தின் மீது சாபம் உள்ளது என தவறாக கூறப்பட்டு வந்தது. ஆனால், உண்மையில் அவர்களுடைய தந்தைக்கும் இந்த பாதிப்பு இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பரம்பரையாக இவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இது டிரீச்சர் கல்லின்ஸ் சிண்ட்ரோம் என மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது. இதனால், முக அமைப்பு மாற்றமடைகிறது. தோல் பலவீனமடைகிறது. ஆனால், உள்ளுறுப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.

முதலில் அவர்களை பார்த்து அவர்களுடன் பழக பலர் தயங்கினர். இதனால், ஒதுக்கப்பட்டவர்களாக சோர்வடைந்தபோதும், விடாமல் முயற்சி செய்து, தினந்தோறும் மேற்கொள்ளும் விசயங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்டவற்றை படம் பிடித்து, டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வீடியோக்களாக வெளியிட்டனர். இதனால், உலக அளவில் பிரபலமடைந்து வருகின்றனர். லட்சக்கணக்கானோரை சென்றடைந்தும் உள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.