Rohit Sharma, Shubman Gill Latest News: இந்திய அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக அஜித் அகர்கரும் தலைமை பயிற்சியாளராக கெளதம் கம்பீரும் வந்த பின்னர் இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின்னர் விராட் கோலி, ரோகித் சர்மா அந்த வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். அதன் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முதலில் ரோகித் சர்மா ஓய்வு அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே விராட் கோலியும் ஓய்வு அறிவித்தார்.
Add Zee News as a Preferred Source
Team India: இந்திய அணியில் நிகழ்ந்த அடுத்தடுத்த மாற்றங்கள்
இதையடுத்து ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தனர். அதோடு டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமித்தனர். 3 வடிவ கிரிக்கெட்டுக்கும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும் என்று கூறி டி20 அணியின் துணை கேப்டனாக கில்லை அறிவித்தனர். இதனால் டி20 அணியில் தொடக்க வீரராக அசத்தி வந்த சஞ்சு சாம்சனின் வாய்ப்பு பறிபோனது. இப்படி கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் வந்தபின்னர் பல மாற்றங்கள் நடந்தன.
BCCI Selection Committee: பின்னால் இருந்து செயல்பட்ட ஆர்பி சிங், ஓஜா
இந்த சூழலில், கடந்த டிசம்பர் 20ஆம் தேதி அறிவித்ததன் மூலம் அனைவரும் அதிர்ச்சி அளித்தது தேர்வுக்குழு. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில்லை நீக்கினர். அதோடு துணை கேப்டனாக அக்சர் படேலையே மீண்டும் நியமித்தனர். இந்த முடிவு ரசிகர்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவர்கள் அஜித் அகர்கர் மற்றும் கம்பீர் ஆகியோர் திருந்தியதாக கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருக்கும் ஆர்பி சிங் மற்றும் ஓஜா தான். இவர்கள் தான் இந்த அதிரடியான மாற்றத்திற்கு பின்னால் இருந்துள்ளனர். டி20 அணியில் இருக்கும் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் காம்பினேஷனை கெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
Rohit Sharma To Be Captain Again: மீண்டும் ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா
இந்த நிலையில்தான், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் சுப்மன் கில்லை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சுப்மன் கில்லுக்கு பதிலாக மீண்டும் ரோகித் சர்மாவையே அணியின் கேப்டனாக கொண்டு வரலாம் என ஆர்பி சிங் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
Rohit Sharma: ரோகித் சர்மாவிடம் பேச்சுவார்த்தை
இது குறித்து ரோகித் சர்மாவிடமும் பேசியதாகவும் ஆனால் அவர் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மா இதற்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவர் ஓய்வு பெறும் வரை அப்பதவியில் நீட்டிப்பார் என தெரிகிறது. மேலும், வரும் 2026 டி20 உலகக் கோப்பையுடன் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவி காலம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji