Best Android Smartphones 2026: 2026 ஆம் ஆண்டில் Samsung Galaxy S25 Ultra வாங்க வேண்டாம் என்கிற எண்ணத்துடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், இந்த செய்தியை ஒருமுறை கட்டாயம் படிக்கவும். தற்போது பிரபலமான இந்த Android உலகில் உங்களுக்கு ஏராளமான ஸ்மார்ட்போன் விருப்பங்கள் கிடைக்கக்கூடும். குறிப்பாக கேமராவை மையமாகக் கொண்ட ஃபிளாக்ஷிப்கள் முதல் வலுவான செயல்திறன் மற்றும் பெரிய பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரை, விலை, புகைப்படம் எடுத்தல் அல்லது பேட்டரி ஆயுள் அடிப்படையில் Galaxy S25 Ultra ஐ விஞ்சும் ஸ்மார்ட்போன்கள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் தற்போது 2026 ஆம் ஆண்டில் Samsung இன் Galaxy S25 Ultra மாடலை விட சிறப்பாக செயல் படும் சிறந்த 5 ஆண்ட்ராய்டு போன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றின் விவரத்தை இங்கே காணலாம்.
Add Zee News as a Preferred Source
Google Pixel 10 Pro XL – விலை – ரூ.1,24,999
இயற்கையான புகைப்படங்கள் மற்றும் மென்மையான (Clean) மென்பொருள் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு Google Pixel 10 Pro XL ஒரு சிறந்த தேர்வாகும். இதில் 50MP பிரதான கேமரா, 48MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ மற்றும் 48MP அல்ட்ரா-வைட் கேமராக்கள் இடம்பெற்றுள்ளன; இவை அனைத்துச் சூழல்களிலும் தரமான புகைப்படங்களை வழங்குகின்றன. மேலும், 42MP செல்ஃபி கேமரா, 6.8-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே மற்றும் கூகுளின் சொந்த Tensor G5 சிப்செட் ஆகிய அம்சங்கள், இந்த போனை Samsung S25 Ultra-விற்கு ஒரு நேரடிப் போட்டியாளராக மாற்றுகின்றன.
Vivo X300 Pro – விலை – ரூ.1,09,999
கேமரா பிரியர்களுக்கு Vivo X300 Pro சிறந்த போன் ஆகும். ஏனெனில் இதில் 50MP முதன்மை கேமரா, 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் Zeiss ட்யூனிங் கொண்ட 50MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளது. அதனுடன் இதில் 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே, டைமன்சிட்டி 9500 ப்ராசசர் மற்றும் ஒரு பெரிய 6510mAh பேட்டரி ஆகியவை புகைப்படம் எடுப்பதில் Galaxy S25 Ultra-வை விட சிறந்த ஸ்மார்ட்போன் பிரிவில் வருகிறது.
Oppo Find X9 Pro – விலை – ரூ.72,999
கம்மி விலையில் மாஸ் போன் வாங்கும் எண்ணத்தில் நீங்கள் இருந்தால் கட்டாயம் Oppo Find X9 Pro சிறப்பு தேர்வாக இருக்கும். இதில் 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் மிக அதிக பிரகாசத்தைக் கொண்டுள்ளது. Dimensity 9500 சிப், 16GB வரை ரேம் மற்றும் Hasselblad-டியூன் செய்யப்பட்ட 200MP பெரிஸ்கோப் கேமரா ஆகியவை சாம்சங்கின் அல்ட்ரா மாடலுக்கு வலுவான மாற்றாக அமைகின்றன. இதன் 7500mAh பேட்டரியும் ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும்.
Realme GT 8 Pro – விலை – ரூ.72,999
சிறப்பன் செயல்திறன் கொண்ட போனை தேடுகிறீர்கள் என்றால் Realme GT 8 Pro கட்டாயம் முதலிடத்தில் வரும். இதில் 6.79-இன்ச் 144Hz AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரல் 5 சிப்செட் மற்றும் 200MP பெரிஸ்கோப் கேமரா கொண்டுள்ளது. 8K வீடியோ பதிவு மற்றும் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால் இதில் 7000mAh பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2026 இன் மிகவும் சக்திவாய்ந்த ஆண்ட்ராய்டு போன்களில் ஒன்றாகும்.
Xiaomi 15 Ultra – விலை – ரூ.1,09,999
Xiaomi 15 Ultra, ப்ரோ-லெவல் புகைப்படம் எடுப்பதை விரும்புவோருக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.73-இன்ச் LTPO AMOLED QHD+ டிஸ்ப்ளே மற்றும் 200MP பெரிஸ்கோப் லென்ஸ் உட்பட Leica-டியூன் செய்யப்பட்ட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 5410mAh பேட்டரி மற்றும் 4K செல்ஃபி வீடியோ ஆதரவு Samsung Galaxy S25 Ultra ஐ விட சிறந்த கேமரா அனுபவத்தை தரும்.
About the Author
Vijaya Lakshmi