நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. CSK வீரரை நீக்கியது எந்த வகையில் நியாயம்? முழு விவரம்!

இந்திய கிரிக்கெட் அணி இம்மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதில் டி20 தொடரில் அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பைக்கான இந்திய விளையாடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 03) ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழு அறிவித்தது. இத்தொடருக்கு காயத்தால் விலகி இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பி உள்ளார். அதேசமயம், முகமது சிராஜ், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.ஆனால் தென்னாப்பிரிக்கா தொடரில் சதம் அடித்த ருதுராஜ் கெய்வாக் இடம் அளிக்கவில்லை. 

Add Zee News as a Preferred Source

Shreyas Iyer – Ruturaj Gaikwad: ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதபோது கலக்கிய ருதுராஜ் ஜெய்க்வாட்

ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாதபோது, ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் எடுக்கப்பட்டார். அதில் அவர் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் சதமும் விளாசினார். இதையடுத்து தற்போது நடந்து வரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறுவார் என பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுக்குழு அவரை நிராகரித்துவிட்டது. இது ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. 

Akash Chopra: ஆகாஷ் சோப்ரா கேள்வி 

ருதுராஜ் கெக்வாட்டை அணியில் தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறு என்று கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னால் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் தேர்வு முறை குறித்து சரமாரியான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

BCCI Selection Committe: ருதுராஜை எடுக்காதது எந்த வகையில் நியாயம்? 

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் கில் வந்ததால் திலக் வர்மா இல்லை. ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. தென்ன்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஏன் ரிஷப் பண்ட்டை ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரராக களமிறக்காமல் ருதுராஜை களமிறக்குனீர்கள். அவரை தொடர்ந்து பேக் அப் விக்கெட் கீப்பராக அணியில் எடுக்கிறீர்கள். 

அப்படி இருக்கும்போது, அவருக்கே தென்னாப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு கொடுத்திருக்கலாமே? அதை விட்டுவிட்டு ஏன் ருதுராஜை ஆட வைத்தீர்கள். அப்போது அவரை ஆட வைத்துவிட்டு இப்போது நீக்குவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பி உள்ளார். 

Rishabh Pant: ஸ்ரேயாஸுக்கு பதில் ரிஷப் பண்ட் இறங்க வாய்ப்பு 

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பி உள்ளார். ஆனால் அவரால் முழு நேரம் பீல்டிங் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. இதனால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

India Squad For New Zealand ODI Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்)*, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால். 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.