தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தி, மீட்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய பிரபல நீர்வளப் பாதுகாவலர் ராஜேந்திர சிங்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நியமித்து கடந்த வெள்ளியன்று உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. நீர்நிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இந்த அமர்வு, தூத்துக்குடியைச் சேர்ந்த முத்தலக்குறிச்சி காமராஜ் (எஸ். காமராஜ்) தாக்கல் செய்த அவமதிப்பு மனுவை விசாரிக்கும் […]