ஐபிஎல்லில் இருந்து நீக்கம்! முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு நஷ்டஈடு எவ்வளவு கிடைக்கும்?

பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து பிசிசிஐயின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவருக்கு எந்தவித நிதி இழப்பீடும் வழங்க  வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஐபிஎல் 2026 ஏலத்தில் முஸ்தபிசூர் ரஹ்மான், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளால் போட்டி போடு ஏலம் கேட்கப்பட்டார். இறுதியில் கொல்கத்தா அணி அவரை ரூ.9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இது ஒரு பங்களாதேஷ் வீரருக்கு ஐபிஎல் வரலாற்றில் கிடைத்த மிக உயர்ந்த ஒப்பந்த மதிப்பாகும்.

Add Zee News as a Preferred Source

பிசிசிஐ உத்தரவு

பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடந்த சமீபத்திய வன்முறைகளை அடுத்து, அந்த பகுதியில் பிரச்சனை நிலவியது. இதனால் பிசிசிஐ வங்கதேச வீரரான முஸ்தபிசூர் ரகுமானின் ஐபிஎல் ஒப்பந்தங்களை நீக்க உத்தரவிட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு எந்த காரணங்களையும் குறிப்பிடவில்லை. மாறாக சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மட்டுமே தெரிவித்தது. ஐபிஎல் ஒப்பந்த விதிமுறைகளின்படி, கொல்கத்தா அணி முஸ்தபிசூருக்கு எந்த தொகையும் செலுத்த சட்டரீதியான கடமை இல்லை என்றும், காயம் அல்லது கிரிக்கெட் தொடர்பான காரணங்களால் விடுவிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

காப்பீட்டு கொள்கை

வழக்கமாக அசாதாரண சூழ்நிலைகளில் 50 சதவீதம் வரை காப்பீட்டிலிருந்து செலுத்தப்படுகிறது. இந்தியாவின் காயமடைந்த மத்திய ஒப்பந்த வீரர்களுக்கு இது உதவுகிறது. இருப்பினும் முஸ்தபிசூர் ரகுமானின் காப்பீட்டு உரிமை கோரல் விஷயத்தில், இந்த சூழ்நிலை உள்ளடக்கப்படவில்லை. எனவே கோலாத அணி ஒரு பைசா கூட செலுத்த வேண்டிய தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் முஸ்தபிசூர் ரகுமான் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. காரணம் ஐபிஎல் இந்திய சட்டத்தின் அதிகார வரம்பில் வருகிறது. இருப்பினும் எந்த ஒரு வெளிநாட்டு கிரிக்கெட் வீரரும் இந்த முடிவை எடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

NOC ரத்து

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயின் முடிவால், முஸ்தபிசூரின் நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட்-ஐ ரத்து செய்துள்ளது. முஸ்தபிசூர் தானாக ஐபிஎல் லீக்கிலிருந்து வெளியேறவில்லை மற்றும் எந்த தவறான நடத்தைக்கும் குற்றம் சாட்டப்படவில்லை என்பதால், இந்த சம்பவம் வீரர் உரிமைகள் குறித்து விவாதங்களை தூண்டியுள்ளது. தற்போதுள்ள காப்பீட்டு கட்டமைப்பு அவருக்கு குறைந்தபட்ச ஆதரவை வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஐபிஎல் விதிமுறைகளின்படி, தேவைப்பட்டால் கொல்கத்தா அணி மாற்று வீரரை தேர்வு செய்ய அனுமதிக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் ஐபிஎல்லில் வெளிநாட்டு வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஒப்பந்த உறுதிப்பாடு பற்றிய கேள்விகளை எழுப்பி உள்ளது. 

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.