Ruturaj Gaikwad In Vijay Hazare Trophy: இந்தியாவின் பிரபல உள்ளூர் போட்டிகளில் ஒன்றான விஜய் ஹசாரே டிராபி டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய வீரர்கள் பலரும் சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விராட் கோலி, பாபர் அசாம் ஆகியோரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Add Zee News as a Preferred Source
ருதுராஜ் கெய்க்வாட் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் அவர் அந்த அணியை வழிநடத்தியும் வருகிறார். இந்த சூழலில், ருதுராஜ் கெய்க்வாட் ரன்களை குவித்து தனது ஃபார்மை போட்டிக்கு போட்டி நிரூபித்து வருகிறார்.
Vijay Hazare Trophy 2025 – 26: தடுமாறிய மகாராஷ்டிரா அணி
மகாராஷ்டிரா அணி நேற்று (ஜனவரி 08) கோவா அணிக்கு எதிராக விளையாடியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய வந்த மகாராஷ்டிரா அணி நினைத்தபடி விளையாட முடியாமல் கடுமையாக தடுமாறி வந்தது. பிரித்வி ஷா, அர்சின் குல்கர்னி 0, அன்கீத் பாவ்னே 0, செளரப் நாவலே 5, சித்தார்த் மாத்ரே 3 என் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மகாராஷ்டிரா அணி 25 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து படுமோசமான நிலையில் இருந்தது.
Ruturaj Gaikwad: மகாராஷ்டிரா அணியை தூக்கி நிறுத்திய ருதுராஜ் கெய்க்வாட்
இப்படியான சூழலில் களத்திற்கு வந்த ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிந்து கிடந்த மகாராஷ்டிரா அணியை தூக்கி நிறுத்தினார். மிகவும் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் சதமும் அடித்து கடைசி வரை களத்திலும் இருந்தார். அவர் 131 பந்துகளில் 134 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் உறுதுணையாக நின்று விக்கி ஓஸ்த்வால் 53, ராஜ்வரதன் ஹங்கர்கேகர் 32 ர்னகள் எடுத்தனர்.
Ruturaj Gaikwad 20 Centuries: ருதுராஜ் கெய்க்வாட் மாபெரும் சாதனை
கோவாவுக்கு எதிரான இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் அபார சாதனையை படைத்துள்ளார். அதாவது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் 95 இன்னிங்ஸில் 20 சதங்கள் அடித்துள்ளார். இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு சதம், விஜய் ஹசாரே டிராபி தொடரில் 15 சதங்கள் மற்றும் இந்தியா மற்றும் பி அணிகளுக்காக மொத்தம் சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 20 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Rudraj Gaikwad beats Virat Kohli, Babar Azam: விராட் கோலி, பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய ருதுராஜ் கெய்க்வாட்
குறைந்த இன்னிங்ஸில் 20 சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து 2. குர்ராம் மன்சூர் (பாகிஸ்தான்): 129 இன்னிங்ஸ், மயங் அகர்வால் (இந்தியா): 129 இன்னிங்ஸ், பாபர் அசாம் (பாகிஸ்தான்): 131 இன்னிங்ஸ், விராட் கோலி (இந்தியா): 143 இன்னிங்ஸ், சல்மான் பட் (பாகிஸ்தான்): 149 இன்னிங்ஸ் என பட்டியலில் அடுத்தடுத்து உள்ளனர்.
‘
Ruduraj Gaikwad beats Michael Bevan: மற்றொரு சாதனை
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றொரு சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார். அவர் 95 இன்னிங்ஸில் 5060 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 58.82ஆக உள்ளது. இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 50 இன்னிங்ஸில் விளையாடிய வீரர்களில் அதிக பேட்டுங் சராசரி கொண்ட வீரர் என்ற சாதனையையும் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் 57.86 சராசரியை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji